காதல் அறிகுறி

தூரத்தில் அவள் முகம் காண
இதயத்தில் சிறு படபடப்பு..!

கூட்ட நெரிசலில் தேடாமல் தென்படும்
அவள் முகம் ..!

எதையும் எளிதாக மறந்து போகும்
என்னுள் பதிகிறது - தினம்
அவள் சூடிய பூக்களின் வண்ணம் ...!!

ஆலய வாசலில் அவள் விட்டு சென்ற
செருப்புடன் பேசி பழகுது
என் கால்கள் ..!!

அவள் இல்லை என தெரிந்தும்
அவள் வீட்டு தெருவில் சுற்றுகிறது
என் மோட்டார் சைக்கிள்...!!

எழுதியவர் : வினோ (15-May-18, 2:52 pm)
சேர்த்தது : வினோ
Tanglish : kaadhal arikuri
பார்வை : 128

மேலே