தமிழிசை - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : தமிழிசை |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Nov-1995 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Apr-2018 |
பார்த்தவர்கள் | : 1153 |
புள்ளி | : 17 |
நான் தமிழ் இலக்கண இலக்கணங்களில் புலமை பெறவில்லை
ஆடலிலும் பாடலிலும் எனக்கு ஆர்வமுண்டு
நான் தமிழ் புத்தகங்களின் மேல் பேராசை பிடித்த பித்தனாக மாறி விட்டேன்
என்னுடைய மனதில் உதிக்கும் எண்ணலைகளை தமிழ் மொழி துணையுடன் வெளியிடுகிறேன்
கனவில் உன்னுடன் வாழ்வதும்
நிஜத்தில் உன்னை நினைப்பதும்
இதயத்தில் உன்னையே துடிப்பாக
கொண்டு வாழும் உன்னவள்
இதழோரப் புன்னகையில்
அவள் நாணம் மீட்ட
அவ்வின்ப வெள்ளத்தில் லயித்து
இப்பூவுலகம் மறந்து நான்
நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் நேரத்தில்
எந்தன் கண்கள் உன் கருவிழிகளை ஊடுருவ விழைந்தன.
உந்தன் வரவுக்காக காத்திருந்தன.
உந்தன் அழகிய வதனத்தில் அரும்பும் புன்னகையை காண ஆசைக்கொண்டன.
உன் வரவுக்காக காலம் பாராது காத்திருக்கும் உன்னவளின் விழிகள்!!!
கண்ணே!!
உன் விழியின் புன்னகையில் மயங்கிக் கிடக்கிறேன்..
உன் விழிகளில் மாயம் இருக்கிறது போலும்..
ஏனெனில் உன் விழிகளை கண்டவுடன் நான் உறைந்து விடுகிறேன்
உன் விழி பேசும் கவிதை நான் மட்டுமே வாசிக்கிறேன்
அந்த விழிவில்களின் வர்ணம்தான் என்ன?
என்னை கண்டவுடன் கொஞ்சும் செல்ல சிரிப்பும்
கோபத்தில் கனல் கொண்ட பார்வையும்
வெட்கத்தில் கமலத்தைப் போல பூத்துப் பூரிப்பதும்
அடடா!!
இந்த விழிச்சிறை போதுமடி.. என்னை ஆயுள் முழுதும் சிறையில் அடைத்து வைக்க.
என்னவளின் சிறையில் என்றென்றும்
ஐயா வணக்கம்,
தமிழில் எழுத முயற்சிக்கிறேன் பிழையிருந்தால் மன்னிக்கவும்.
நான் ஒரு ஆரம்ப கால வாசகன். உங்கள் அறம் நாவல் மற்றும் பனிமணிதனை தொடர்ந்து ஏலாம் உலகம் வாசித்து முடித்தேன்.
என்னுடைய புரிதல்:
ஒரு கசப்பான அனுபவம். நமக்குள் எத்தனை வக்கிரங்கள். நாம் செய்வது தவறு என்ற பிரக்னையெ இல்லாமல் எல்லாம் நடக்கிறது. எனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது முத்தம்மை கடைசியில் கூணனுடன் இனைந்தது அது அவளின் முதல் பிள்ளை என்று முந்தைய அத்தியாயத்தில் எனக்கு தோணியது. அந்த ஒற்றை விரல் மேலும் உறுதி செய்தது. முத்தம்மைக்கு தெரிய வருகிறது பெருமாளை அழைக்கிறாள் ஆனால் எதுவும் சொல்லவில்லை பதறுகிறாள் கதறுகிறா
முதல் முதலில் பார்த்த பார்வையிலேயே என்னை கவர்ந்துவிட்டாய்
வாழ்க்கை உன்னிடத்தே என முடிவு செய்துவிட்டேன்
நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி
நாமா இப்படி மாறி போனோம் என்று
கோபம், தாபம், வெட்கம், மௌனம் இவையனைத்தும் நம் வாழ்வில் வந்த வண்ணமே உள்ளன
நம்பிக்கை வேரூன்றி கொண்டது இருவரிடமும்
நாம் காதலித்த முதல் நாள் முதல் இன்று வரை ஊடலும் கூடலும் ஒருங்கே ஒட்டிக்கொண்டன
காமம் என்பதே மறந்து காதல் மட்டுமே குடிகொண்டு விட்டது
.
"காமம் இல்லாமல் காதல் இல்லை.. ஆனால் காமம் மட்டுமே காதல் ஆகாது"
இதை நம் காதலே நமக்கு உணர்த்தியது..
உன்னை போல் என்னால் யாரையும் காதலிக்க இயலாது
காதல்
பௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...
அவனைத் தேடி அலைந்தாள்...
முழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...
அவனுக்காக ஏங்கித் துடித்தாள்...
விண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...
இப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....
அவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..
பௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...
அவனைத் தேடி அலைந்தாள்...
முழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...
அவனுக்காக ஏங்கித் துடித்தாள்...
விண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...
இப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....
அவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..