விழிச்சிறை

கண்ணே!!

உன் விழியின் புன்னகையில் மயங்கிக் கிடக்கிறேன்..

உன் விழிகளில் மாயம் இருக்கிறது போலும்..
ஏனெனில் உன் விழிகளை கண்டவுடன் நான் உறைந்து விடுகிறேன்
உன் விழி பேசும் கவிதை நான் மட்டுமே வாசிக்கிறேன்

அந்த விழிவில்களின் வர்ணம்தான் என்ன?

என்னை கண்டவுடன் கொஞ்சும் செல்ல சிரிப்பும்
கோபத்தில் கனல் கொண்ட பார்வையும்
வெட்கத்தில் கமலத்தைப் போல பூத்துப் பூரிப்பதும்

அடடா!!

இந்த விழிச்சிறை போதுமடி.. என்னை ஆயுள் முழுதும் சிறையில் அடைத்து வைக்க.

என்னவளின் சிறையில் என்றென்றும்

எழுதியவர் : தமிழிசை (7-Aug-18, 3:46 pm)
சேர்த்தது : தமிழிசை
பார்வை : 200

மேலே