நீயும் , நானும்

நீ ரோசாப்பூ , நான்
அதன் கிளையின் முள்
உனக்கு பாதுகாப்பு..............

கொடிபோல் இருப்பவளே
பைங்கொடியே,உன்னை
அணைக்கும் தென்றல்
அல்லவோ நான்......................

கவிதையடி நீ
எந்தன் இனிய கவிதை,
அதை பாடவைக்கும்
பாடகனடி பெண்ணே நான்...............

கடலடி நான் பெண்ணே
என்னை வந்து தழுவிக்கொண்டு
என்னுள் சங்கமிக்கும்
நதியல்லவோ நீ எனக்கு...................

நீலவானில் உலவிடும்
சந்திரமதியடி நீ, பெண்ணே,
என் பிடியில் வைத்து
உன்னைக் கொஞ்சவரும்
வெண்மேகமல்லவோ நான்

இளமையெலாம் பூத்துக்
குலுங்கும் பூமரமடி நீ,
உன்னைத் தாங்கும்
மண் அல்லவோ நான், பெண்ணே

நீயும் நானும்
ஆண் வண்டு பெண் வண்டாய்
காதல் மாமலரில் தேனுண்டு
களித்திருப்போமடி பெரும்
சுகம் கண்டு இன்புறவே
காலம் முடியும் வரை.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Aug-18, 4:09 pm)
பார்வை : 301

மேலே