ரதிராஜ் - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/nfmrp_31385.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ரதிராஜ் |
இடம் | : Sivakasi |
பிறந்த தேதி | : 28-Oct-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 198 |
புள்ளி | : 84 |
No one can judge me except GOD
என்னை தேவதையாக
உயர்த்திய திருமகனே
உனக்காக ,
நரம்பு கயறு எடுத்து
காலத்தை நகராமல்
நம்மோடு இணைக்கவா ?
சரித தேகத்தில் புகுந்து
ஒளிந்து வளர்ந்த உயிரை
உயில் எழுதவா ?
குருதி ஓடும் திசையில்
இதய துடிப்பை பிணைத்து
மெட்டு ஒன்று அமைக்கவா ?
உன் பெயர் சொல்லும் பொது
பொங்கும் இன்பத்தை
நிரப்பி வைக்க
புது கிரகம் தேடவா ?
அத்தனையும் சாத்தியம்
இது சத்தியம்
ஒரே ஒரு ஐயம்
உன்னை பிரிய நேர்ந்தால்
நியாபக பிசாசு
எனக்குள் உட்க்கார்ந்து
இறங்க மறுக்கும்
எரிமலையின் உச்சகட்ட
வெட்பாமாக
உன் முத்த ஈரம்
என்னை கொழுத்தும்
சூரியனின் இரவல் ஒளியை
திருப்பி கொடுத்த அம்புலி
வார்த்தைகள் விடுமுறை கேட்கிறது .
நம் சந்திப்பில்
புரிந்தது கொண்டேன்
மௌன பூக்களை
மலர செய்வது
காதல் தான்
என் கட்டிலில்
கலர் கலர் கனவுகள்
காணாமல் போய்
வெகுநாட்கள் ஆனது
நித்திரை களவாடப்பட்டது
உன் கண்களால்
இத்தனை வேதனைகளா
காதலில் ?
அத்தனையும் சுகமாக
இருப்பது எப்படி?
எங்கிருக்கிறாய்
என் பிராண நாதனே ?
ஏதோ ஒரு இருள்
எனக்குள் இருப்பது
உள் உணர்வோ ?
கற்பனையோ?
தெரியவில்லை.
ஆதவனே
உன் உதயத்தில் தான்
என் வாழ்கை துளிர் விடும்
இனி நீ எனக்காகவும்
சுவாசித்திடு
உன் விழிகளில்
எனது கனவு களை
பதிவு செய்
உன் பெயருக்கு
முன்னாள் வருபவள்
இவள் என காத்திரு
மண்ணுக்குள் இருக்கும்
வைரம் போல்
எனக்குள் புதைய
எப்போது வருவாய்?
நீ என்றோ உதிர்த்த
மந்திர புன்னகையின்
அர்த்தம் தெரிகையில்
நட்சத்திர இடைவெளியில்
நாம்
உந்தன் காதல்
அழகிய கனவாக
இன்னும் நீள்கிறது
என்னுள்
தவமிருந்தவர்களுக்கு
கிடைத்த சாபம்
"காதல் தோல்வி"
இதனை எதனால்
மெய்ப்பிக்க ?
அறியேன் .
அதனை அறிந்தால்
இயம்புக .
புற்களும் புதுவித
அதிசயமாக
என் கண் முன்னே
உன் நினைவு
என்னை இயங்க வைக்கும்
சக்தியோ?
என் அதிகாலை
தேடும் விழிகள் உனது .
உறங்கும் வேளை
தலை சாயத்துடிக்கும்
நின் மார்பு எனது .
கைகோர்த்து நடக்க
தலை தூக்கும் அவா.
மறுநொடியே
தூங்கி போகும்
பயத்தின் கைபிடித்தபடியே .
ஒரு சொல் சொல்லாமல்
உடைந்தது இதயம் .
எனினும்
நீயும் காதலும்
என்னுள்
ஆழத்தினும் ஆழமாய்
கண்ணம் சுடும்
நீர்த்துளிகள்
ஓர் செய்தி
உண்மையென உரைத்தது .
நீ இன்றி
வாழ்வு இல்லை .
சிறுக சிறுக
தவிக்க வைத்து
ஒரே பார்வையால்
கவர்ந்தவனே
நிமிட நேரங்களில்
லச்சம் முறை
நின்னை கண்டு
உருகினேன்
அந்த சிரிப்பில்
நித்தம் கரைந்து
இதோ காதல்
சித்ரவதைகளின்
உச்சத்தில் நின்றிருக்க.
என் சரிபாதியே என
உரிமையாய்
கொஞ்சி செல்வாய்
கண் ஜாடைமூலம்
சுவாச வெப்பம்
படும் தூரத்தில்
தொடாமல் ;
நீ என்னை
களவாடிய பொழுதுகள்
நித்திய பரிசுகளாக
இன்றளவும் இனிக்கிறது
இத்தனை காதல்
எத்தனை நாள்
மறைத்து வைத்திருந்தாயோ ?
உனக்காக
என்ன செய்வது?
நரம்பு கயிறு எடுத்து
காலத்தை நகராமல்
நம்மோடு இணைக்கவா ?
செல்களையெல்லாம் இலையாக
விரித்து என்னையே பரிமாறவா?
சரித தேகத்தில் புகுந்து
ஒளிந்து வளர்ந்த உயிரை
உனக்கு உயில் எழுதவா?
குருதி ஓடும் திசையில்
இதயத்துடிப்பை பிணைத்து
கண் இமைக்கும் நேரத்தில்
மெட்டு ஓன்று அமைக்கவா?
என் உடல்
மச்சங்களை மட்டும்
பிரித்தெடுத்து
நம் காதலுக்கு
சுற்றி போடவா ?
தென்றலாக மாறி
உன் ஸ்வாசத்தோடு கலந்து
மூச்சு குழலில் உள்ளிறங்கி
என்னை நானே கண்டுவரவா?
இத்தனையும் சாத்தியம்.
உன்னை பிரியநேர்ந்தா
மனதோடு நான் கட்டிய
தாஜ்மஹால் இன்று
காலத்தால் வந்த புயலால்
துளித்துளி கண்ணீரில்
கரைந்து கொண்டிருக்கிறது.
வெண்ணிலா ஈன்ற
மண்ணிலா பெண்ணிலா
சோலையிடம் என்னவள்
பெயர் கேட்டேன் "ரோஜா"
என்றது மாடப் புறா
கனவில் முத்தம் கேட்டேன்
காற்றில் விலகிய
துப்பட்டாவை சரி செய்கிறாள்
பூக்களின் தேசத்தில் நான்
குற்றவாளியாக நிற்கிறேன்
காற்றும் பிடியாணை வாங்கி
என்னை தேடி அலைகிறது.
வேதம் ஓதும் கல்லூரியில்
சொல்லாமல் இணைந்தாய்.
சிலமாதம் வருடம் கடந்தும்
உன் முகம் காணவில்லை..,
பாதணி திருத்தும் பணியில்
உன் முன்றலில் காத்திருக்கிறேன்.
வழமையான என் பாதையும்
இளமையான என் வாழ்க்கையு
வாழ்க்கையை
வாழ பிடித்தவர்களை விட
வாழ புரிந்தவர்களுடைய வாழ்க்கை
மிகவும் அழகாக இருக்கும்.
ஏனென்றால் வாழ புரிந்து கொண்டால்
வாழ்க்கை பிடித்தமாகி விடும்.
என்னை மறந்து போ
நீ இறுதியாக உரைத்தது
இதை தான்.
இதற்காகவா
உன்னை பார்ப்பதிலே
பொழுதை போக்கினேன்
நினைத்து நினைத்து
நான் கண்ட
இன்பங்கள் எல்லாம்
இன்று செல்லாதவையா?
நாளடைவில் ஆறிவிட
நீயும் காதலும்
காயம் அல்லவே
காலபோக்கில்
மறந்துவிட
தழும்பன்றே
இதயத்தில் விழுந்த
உன் உருவத்தை
எடுப்பது
எப்படி?
என்னை
உன்னில் இருந்து
மீட்டெடுப்பது யார்?
எனக்காக
நீ விட்டு சென்றது
நினைவுகள் அல்ல
ரணங்கள்
நண்பர்கள் (25)
இவரை பின்தொடர்பவர்கள் (26)
![தினேஷ் தமிழன்](https://eluthu.com/images/userthumbs/f3/izqvn_31364.jpg)
தினேஷ் தமிழன்
சேலம் (தமிழ்நாடு)
![முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்](https://eluthu.com/images/userthumbs/f3/qliou_30127.jpg)
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
![RAM LAX](https://eluthu.com/images/userthumbs/f1/qpwnf_18680.jpg)