வேதனை

வார்த்தைகள் விடுமுறை கேட்கிறது .
நம் சந்திப்பில்
புரிந்தது கொண்டேன்
மௌன பூக்களை
மலர செய்வது
காதல் தான்
என் கட்டிலில்
கலர் கலர் கனவுகள்
காணாமல் போய்
வெகுநாட்கள் ஆனது
நித்திரை களவாடப்பட்டது
உன் கண்களால்
இத்தனை வேதனைகளா
காதலில் ?
அத்தனையும் சுகமாக
இருப்பது எப்படி?