எங்கிருக்கிறாய்

எங்கிருக்கிறாய்
என் பிராண நாதனே ?

ஏதோ ஒரு இருள்
எனக்குள் இருப்பது
உள் உணர்வோ ?
கற்பனையோ?
தெரியவில்லை.

ஆதவனே
உன் உதயத்தில் தான்
என் வாழ்கை துளிர் விடும்

இனி நீ எனக்காகவும்
சுவாசித்திடு

உன் விழிகளில்
எனது கனவு களை
பதிவு செய்

உன் பெயருக்கு
முன்னாள் வருபவள்
இவள் என காத்திரு

மண்ணுக்குள் இருக்கும்
வைரம் போல்
எனக்குள் புதைய
எப்போது வருவாய்?

எழுதியவர் : ரதி ரதி (21-Mar-18, 12:08 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : engirukkirai
பார்வை : 64

மேலே