முதல் பிள்ளையின் ஆற்றாமை

எங்கள்
இல்லத்து
இளவரசன்
நான் தான்
நேற்று வரை...

இன்று
இளையவன்
வந்து விட்டான்
கேட்டால்
கடைக்குட்டியாம்...

அம்மா என்றதும்
எனை அணைக்க வரும்
என் அன்னை
அரவணைத்தப்படியே அமர்ந்திருக்கிறாள்
இளையவனோடு..
அவள் குரலை மட்டும் எனக்காக
அனுப்பி விட்டு..

என்னோடு எப்போதும்
கதைபேசிய அம்மா
இப்போது தாலாட்டு
பாடுகிறாள்...

என்னைத் தட்டித் தூங்க வைக்கும் அம்மா
இப்போது தம்பிக்கு
தட்டிக் கொடுக்கிறாள்...

என்னை மட்டும்
படம் பிடித்த
அப்பாவின்
கைப்பேசி இப்போது அவனை மட்டும் அதிகம்
படம் பிடிக்கிறது...

நான் என்ன செய்தாலும்
ரசித்த தாத்தா பாட்டி
இப்போது எதை செய்தாலும்
அதட்டுகிறார்கள்..
கேட்டால் தம்பி
விழித்து விடுவானாம் என் சத்தம் கேட்டு...

என்னால் இது எதையும்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையே...

என்ன செய்வேன் நான்....?

எழுதியவர் : கலா பாரதி (21-Mar-18, 2:21 pm)
சேர்த்தது : கலா பாரதி
பார்வை : 42

மேலே