அன்னையின் பாதங்களில்

புரியாத வார்த்தையைப் புரியும்படி சொல்லி,
அறியாத தத்துவங்களை அன்பாய் விளக்கி,
காணாத பாதை காட்டி,
அளவில்லா அன்பு காட்டி,
உயர்வான சத்தியத்தில்,
உண்மையான சாத்தியதியும் காட்டி,
அழகாய் வழிநடத்தும்
என் அன்பு அன்னையே
உன் பாதக் கமலங்களில்,
என் பணிவான வணக்கங்கள்.....

-கலைப்பிரியை

எழுதியவர் : கலைப்பிரியை (21-Mar-18, 4:09 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 638

மேலே