அக்கா நீயோ மணக்கோலம்

வீடோ திருமணக் கோலம்
அக்கா, நீயோ மணக்கோலம்
நானோ கண்ணீர் கோலம்
இது எதனால்?
ஆனந்த கண்ணீரா!- தெரியவில்லை
இனி மேல் சண்டை போட
எனை திட்ட
அறிவுரை சொல்ல
அன்பு காட்ட, அரவணைக்க
இனி யார்?
இனி மேல் என் கதைகளுக்கு
.........செவி கொடுக்க யாருமில்லை
அரட்டைக்கு உடன் நீ இல்லை
.........ஆதரிக்க உன்னை போல் ஒரு தோழி இல்லை
யார் இந்த எழுதப்படாத சட்டத்தை இயற்றியது
........பெண் புகுந்தகம் புக வேண்டும் என்று
ஒன்றாக வளர்ந்த இரு சிட்டு குருவிகளில்
........ஒன்று பறந்துவிட்டது
தன் சொந்த வானில் சிறகடிக்க
.........மற்றோன்று சந்தோஷ சங்கடங்களில் கை அசைக்க .....

எழுதியவர் : கலைப்பிரியை (21-Mar-18, 4:28 pm)
சேர்த்தது : kalaipiriyai
பார்வை : 69

மேலே