கலங்காதே காதலியே
தொலைதூரம் நான் போனாலும்
உன் நினைவு நீங்கிப்போய்விடுமோ ....
உந்தன் அன்பு இல்லாமல்
எந்தன் நாட்கள் நகர்ந்திடுமோ ....
கோபம், பிரிவு வந்தாலும்
நம் காதல் மாறிப்போகாதே ...
கவலை நீ கொள்ளாதே
எந்தன் ஆருயிர் காதலியே ....
கண்டம் தாண்டிப்போனாலும்
உயிர்க்காதல் என்றும் மாறாதே ...
தடைகள் நூறு வந்தாலும்
நம் காதல் உடைத்து கரை சேரும் ...