வீர மங்கை சுனிதா அவர்களுக்கு வாழ்த்து

#சாதனை புரிந்த வீர மங்கை சுனிதா வில்லியம்ஸ் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்🌺🌺🌺

தேன்இனிக்கும் செய்திதானே
செவிதனிலே பாய்ந்து -
நீள்
தீமையவை மாய்ந்து - அவள்
தேகவலிமை சாய்ந்து
பல
தீரச்செயல் புரிந்தமங்கை திரும்புகிறாள் ஓய்ந்து..!

வான்வெளியின் சாதனையில்
வளர்ந்துவிட்ட மங்கை - இறை
வரங்கள்பெற்ற நங்கை -
எடு
வாழ்த்தொலிக்கச் சங்கை - அவள்
வருகிறாளே மண்ணிறங்கி
வழியும்விழியில் கங்கை..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (19-Mar-25, 9:42 am)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 16

மேலே