களவாடிய பொழுதுகள்

சிறுக சிறுக
தவிக்க வைத்து
ஒரே பார்வையால்
கவர்ந்தவனே

நிமிட நேரங்களில்
லச்சம் முறை
நின்னை கண்டு
உருகினேன்

அந்த சிரிப்பில்
நித்தம் கரைந்து
இதோ காதல்
சித்ரவதைகளின்
உச்சத்தில் நின்றிருக்க.

என் சரிபாதியே என
உரிமையாய்
கொஞ்சி செல்வாய்
கண் ஜாடைமூலம்

சுவாச வெப்பம்
படும் தூரத்தில்
தொடாமல் ;

நீ என்னை
களவாடிய பொழுதுகள்
நித்திய பரிசுகளாக

இன்றளவும் இனிக்கிறது

எழுதியவர் : ரதி ரதி (31-Oct-16, 12:03 pm)
பார்வை : 243

மேலே