அம்பிகா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  அம்பிகா
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  24-Aug-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Jul-2016
பார்த்தவர்கள்:  255
புள்ளி:  95

என்னைப் பற்றி...

வாழ்கை ஒரு முறை மட்டுமே அதை இந்த கவிதையோடு அனுபவித்து வாழும் வாழ்கையை ரசிக்க வேண்டும்..

என் படைப்புகள்
அம்பிகா செய்திகள்
அம்பிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 8:30 am

நாடு பார்த்திடுமா இனிமேல் இப்படி ஒரு வீர மங்கயை..

தன் பேச்சாலும் செயலாலும் தமிழகத்தை தலை நிமிர செய்தவர்..

தனி ஆளாக அரசியலில் நின்று சாதனை படைத்தவர்..

பெண்களுக்கெல்லாம் தன் தைரியத்தால் ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்..

அரசியல் சாம்ராஜயத்தில் முத்திரை பதித்த வீர மங்கை..

தனக்கென குடும்பம் பிள்ளை இல்லை அம்மா என்று ஓடி வர பெண் பிள்ளை இல்லை..

அனனத்தையும் மீறி அம்மாவுக்காக இந்த தமிழ் நாடே அழுகிறது..

எழுபத்து ஐந்து நாட்கள் மரணத்தோடு போராடிய போராளி..

மரணம் இவரை வென்று விடவில்லை இவர் மரணத்தை ஜெயித்து விட்ட ஜெயலலிதா..

இப்படி ஒரு வீர மங்கையை இனி இந்த நாடு பார்த்திடுமா..

ஆண்கள் ஆள

மேலும்

அம்பிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Nov-2016 8:19 pm

உன் நினைவுகள் என்னை
முழுதுமாய் ஆக்கரமித்து
கொள்கிறது..

தென்றல் தீண்டினாலும்
உன் நினைவுகளால்
என் மனம் புயல்
எச்சரிக்கை விடுக்கிறது..

கடலிடம் கோபம் கொண்டேன்
என்னவள் வராமல் ஏன் அவள்
நினைவுகளை கரை
ஒதுக்கினாய் என்று..

எப்படி புரிய வைப்பேன்
என் இதயத்திற்கு
அவள் நினனவுகளால்
தான் நீ துடிக்கிறாய் என்று..

உன் நினைவு வருகையிலே
என் மனதில் மழையாய்
பொழிகிறாய் என்னையும்
அறியாமல் என் விழியோரம்
கண்ணீர் துளிகள்..

உன் நினைவுகளுக்கு
நன்றி சொல்கிறேன்
நான் உயிர் வாழ்வதே
உன் அழகிய
நினைவுகளால் தான்..

மேலும்

ஆஹா அருமையான வரிகள் தோழி தென்றல் தீண்டினாலும் உன் நினைவுகளால் என் மனம் புயல் எச்சரிக்கை விடுக்கிறது.. என் மனம் கவர்ந்தது .... வாழ்த்துக்கள் என்னுயிர் தோழியே ..... 23-Nov-2016 2:06 pm
காதலின் நினைவுகள் சுகமானது..அது சுமையானாலும் காலப் போக்கில் சுகமாகிறது 23-Nov-2016 7:46 am
அம்பிகா - அம்பிகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 3:58 pm

உன் குழந்தை சிரிப்பினில்
இந்த உலகினை மறந்தேன்..

உன் மழலை மொழியில்
செந்தமிழும் உன்னிடம்
மொழி பயிலுதடி..

உன் பிஞ்சு கைகளில்
நீ செய்யும் சேட்டைகளை
என் கவலைகள் மறந்திட
ரசித்தேன்..

உன் வெண் பாதங்களில்
நீ நடந்திட வீடெங்கும்
உன் கால் தடங்கள்..

வீடெங்கும் சிதறி கிடக்கும்
குப்பைகள் ஆனாலும் வெளியில்
கொட்ட மனம் வரவில்லை..

எப்படி அதை வெளியில் கொட்டுவேன் அனைத்திலும்
பதிந்திருக்கிறது உன் ஞாபகங்கள்..

உன் செல்ல சிணுங்கள்களில்
என் பொய் கோபமும்
தோற்று போனது..

வீட்டு சுவரெங்கும் நீ எழுதிய
கிறுக்கல்கள் அழித்திட மனம் வரவில்லை..

நீ எழுதிய கிறுக்கல்களும்
எனக்கு பொக்கிஷமே..

மேலும்

கவிதை நயமும் அழகு வண்ண ஓவியமும் போற்றுதற்குரியவை பாராட்டுகள் 27-Nov-2016 9:42 pm
நன்றி தோழியே.. 22-Nov-2016 7:58 pm
பொக்கிசமான கவிதை .....அழகு என்னுயிர் தோழியே 14-Nov-2016 8:07 pm
அம்பிகா - J K பாலாஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 12:21 am

காலம் செய்த கோலம் அல்ல
ஞாலம் கூறிய பாவம் அல்ல
பாவம் செய்த பாவம் இது
பாவமானவர்கள் வஞ்சித்த சாபம் இது..!

கள்ள மனம் படைத்தவன்
கள்ள பணம் மண்ணில் புதைத்தவன்
மண்ணோடு மண்ணாய் மாண்டானோ
மனமும் பணமும் ஆறடிக்குழிக்குள்..!

பிச்சைக்காரனாய் நடித்தவன்
பிச்சைகாரனாய் மாறிப்போகிறான்..!
நடுத்தெருவில் அவனும்
அவன் வைத்த பணமும்..!

காலமும் காலனும்
செய்த கோலம்
முற்றுப்புள்ளி வைத்தது
கள்ள மனமும் பணமும்..!

-ஜ.கு.பாலாஜி-

மேலும்

தங்கள் கருத்தாலும் வருகையாலும் உளம் மகிழ்ந்தேன்...மிக்க நன்றி நட்பே...! 14-Nov-2016 7:39 pm
கசப்பான உண்மை.. காலத்தின் கட்டாயமும் அதுவே.. அருமையான பதிவு தோழரே. 14-Nov-2016 4:56 pm
ஆம் நண்பா...மிக்க நன்றி ...! 14-Nov-2016 10:46 am
நிகழ்காலம் மாற்றம் என்பதை தொடங்கி இருண்மையை விட்டு விடியலை நோக்கி நகர்கிறது 14-Nov-2016 9:18 am
அம்பிகா - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 9:52 am

வானின் நிலவு
என் மனதின் ஒரு கனவு

நிலவும் இரவு
புதிதாய் கவிதை வரவு

வெளியே இருட்டு
என் இதயம் திருட்டு

கண்டுபிடிக்க முயற்சி
தினம் தினம் பயிற்சி

கண்டேன் உன்னை
மறந்தேன் என்னை

பிறந்தது அன்பு
மலர்ந்தது மகிழ்வு

நீ இருந்தால் உலகம் அழகு
நீ இல்லையேல் ஏது வாழ்வு பிறகு....

மேலும்

வரவால் மகிழ்ந்தேன் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழரே 14-Nov-2016 8:26 pm
வரவால் மகிழ்ந்தேன் கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழியே 14-Nov-2016 8:25 pm
வாழும் வாழ்க்கையில் ஆயிரம் புரியாத சங்கதிகள் 14-Nov-2016 5:24 pm
வரிகளில் தெரிகிறது உன் வர்ணனை.. அழகு தோழியே.. 14-Nov-2016 4:54 pm
அம்பிகா - கிரிஜா தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Nov-2016 10:15 am

பத்து மாதம் அன்னையின்
பனிக்குடம் உடைத்து வந்த
பனி மலரே....

தென்றலினும் மெல்லிய
தேகம் பட்டு உடைகிறது
என் நெஞ்சு ..

உன் புன்னகை தான் பட்டு
பூக்காத பூக்களெல்லாம்
பூக்குதே ....

உன் கன்னம் தொட்ட
மை தனில் பல காவியங்களின் வரவு...

உன் இரு கன்னக் குழிகளில்
ரோஜாத்தோட்டம் போட்டது யார்....

உன் கண்கள் கொஞ்சம்
உற்று பார்த்தால்
கடவுளின் சாயல் தெரிகிறது ....

பிஞ்சு பாதம் அது பூமி படுகையிலே
நெஞ்சு பதறி போகிறது ...

உன் கொஞ்சும் மொழி தான் கேட்க
கொஞ்ச நேரம் போதாது ...

உன் அழகின் சாயலில்
எத்தனை பூக்கள் பூத்தாலும்
உன் புன்னகை முன்
அத்தனையும் தோற்று
மடிந்து விடுகிறது ....

மேலும்

வாழ்த்துக்களால் மகிழ்ந்தேன் கருத்தால் கவி புனைந்தேன் நன்றிகள் தோழரே .... 23-Nov-2016 1:58 pm
குழந்தைகளின் உலகம் கண்முன் விரிகிறது ,,,,,, கவிதை அழகு ,,,, வாழ்த்துக்கள் தோழி ,,,,! 16-Nov-2016 12:04 pm
உண்மை. 14-Nov-2016 10:33 pm
நேரு மாமா இன்று இல்லையே! கவிதை நயம் .(குழந்தை பிறப்பு முதல் குழந்தை வளர்ப்பு வரை) போற்றுதற்குரிய படைப்பு., பாசமலர் தொடரட்டும் 14-Nov-2016 9:53 pm
அம்பிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Nov-2016 3:58 pm

உன் குழந்தை சிரிப்பினில்
இந்த உலகினை மறந்தேன்..

உன் மழலை மொழியில்
செந்தமிழும் உன்னிடம்
மொழி பயிலுதடி..

உன் பிஞ்சு கைகளில்
நீ செய்யும் சேட்டைகளை
என் கவலைகள் மறந்திட
ரசித்தேன்..

உன் வெண் பாதங்களில்
நீ நடந்திட வீடெங்கும்
உன் கால் தடங்கள்..

வீடெங்கும் சிதறி கிடக்கும்
குப்பைகள் ஆனாலும் வெளியில்
கொட்ட மனம் வரவில்லை..

எப்படி அதை வெளியில் கொட்டுவேன் அனைத்திலும்
பதிந்திருக்கிறது உன் ஞாபகங்கள்..

உன் செல்ல சிணுங்கள்களில்
என் பொய் கோபமும்
தோற்று போனது..

வீட்டு சுவரெங்கும் நீ எழுதிய
கிறுக்கல்கள் அழித்திட மனம் வரவில்லை..

நீ எழுதிய கிறுக்கல்களும்
எனக்கு பொக்கிஷமே..

மேலும்

கவிதை நயமும் அழகு வண்ண ஓவியமும் போற்றுதற்குரியவை பாராட்டுகள் 27-Nov-2016 9:42 pm
நன்றி தோழியே.. 22-Nov-2016 7:58 pm
பொக்கிசமான கவிதை .....அழகு என்னுயிர் தோழியே 14-Nov-2016 8:07 pm
அம்பிகா - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Nov-2016 12:29 am

அன்பின் அருமை
தனிமையில் தெரியும்..

உறவுகளின் அருமை
பிரிவில் தெரியும்..

நண்பர்களின் அருமை
கஷ்டத்தில் தெரியும்..

பெற்றோரின் அருமை
நாம் பெற்றோர் ஆகும்
போது தெரியும்..

தண்ணீரின் அருமை
தாகம் தணியும்
போது தெரியும்..

நேரத்தின் அருமை
தேர்வில் தெரியும்..

விநாடியின் அருமை
விளையாட்டு போட்டியில் தெரியும்..

தாய்மையின் அருமை
குழந்தை சிரிப்பில் தெரியும்..

மனைவியின் அருமை
வீட்டின் வெறுமையில் தெரியும்..

பூவின் அருமை
அதன் வாசத்தில் தெரியும்..

மழையின் அருமை
வறண்ட பூமிக்கு தெரியும்..

மொழியின் அருமை
பேச்சில் தெரியும்..

காதலின் அருமை
புரிந்து கொள்ளுதலில் தெரியும்.

மேலும்

விநாடியின் அருமை விளையாட்டு போட்டியில் தெரியும்.. ----தொகுப்பு அருமை படம் வெரி நைஸ் அன்புடன்,கவின் சாரலன் 12-Nov-2016 9:57 pm
இதை விட வேறு என்ன வேண்டும்..அழகான புரிதல்கள் அன்பான வாழ்க்கையின் சங்கதிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Nov-2016 7:43 am
அம்பிகா - அம்பிகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2016 9:05 pm

என் இதயம் துடிக்கவில்லை
என் இதயத்தின் சாவி
உன்னிடம் அல்லவா இருக்கிறது
காதல் என்ற என் இதய பூட்டை
சம்மதம் என்ற உன் சாவி கொண்டு
திறந்திட வா...
மரணம் என்னை தழுவும் வரை
உன் சாவிக்காக காத்திருக்கிறேன்.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

J K பாலாஜி

J K பாலாஜி

அவனியாபுரம்,மதுரை
user photo

கங்கைமணி

கங்கைமணி

மதுரை
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்

இவரை பின்தொடர்பவர்கள் (7)

கிரிஜா தி

கிரிஜா தி

பனப்பாக்கம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

மேலே