வீர மங்கை

நாடு பார்த்திடுமா இனிமேல் இப்படி ஒரு வீர மங்கயை..

தன் பேச்சாலும் செயலாலும் தமிழகத்தை தலை நிமிர செய்தவர்..

தனி ஆளாக அரசியலில் நின்று சாதனை படைத்தவர்..

பெண்களுக்கெல்லாம் தன் தைரியத்தால் ஒரு முன் உதாரணமாக திகழ்பவர்..

அரசியல் சாம்ராஜயத்தில் முத்திரை பதித்த வீர மங்கை..

தனக்கென குடும்பம் பிள்ளை இல்லை அம்மா என்று ஓடி வர பெண் பிள்ளை இல்லை..

அனனத்தையும் மீறி அம்மாவுக்காக இந்த தமிழ் நாடே அழுகிறது..

எழுபத்து ஐந்து நாட்கள் மரணத்தோடு போராடிய போராளி..

மரணம் இவரை வென்று விடவில்லை இவர் மரணத்தை ஜெயித்து விட்ட ஜெயலலிதா..

இப்படி ஒரு வீர மங்கையை இனி இந்த நாடு பார்த்திடுமா..

ஆண்கள் ஆளும் அரசியலில் ஒரு இரும்பு மங்கையாக இருந்து அனைவரையும் ஆட்டம் காண செய்தவர்..

உயிர் மட்டுமே இவர் உடலில் இருந்து பிரிந்து சென்று இருக்கிறது..

இவர் மேல் நாங்கள் அனனவரும் வைத்திருக்கும் பாசம் நேசம் தமிழக மக்கள் அனைவருக்கும் அம்மா என்ற உறவை யாராலும் பிரிக்க முடியாது..

அனைத்து போராட்டங்களையும் தாண்டி நிம்மதியாக கண் உறங்கும் எங்கள் தமிழக அம்மாவிற்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்..

அவர் மரணத்தை யாராலும் ஈடு செய்ய முடியாத ஒரு மிகப் பெரிய இழப்பு..

அம்மாவிற்காக என் மனதின் இரங்கல் கவிதை
கா. அம்பிகா😭😭😭

எழுதியவர் : கா. அம்பிகா (6-Dec-16, 8:30 am)
சேர்த்தது : அம்பிகா
Tanglish : veera mangai
பார்வை : 335

மேலே