மழலை செல்வம்

உன் குழந்தை சிரிப்பினில்
இந்த உலகினை மறந்தேன்..

உன் மழலை மொழியில்
செந்தமிழும் உன்னிடம்
மொழி பயிலுதடி..

உன் பிஞ்சு கைகளில்
நீ செய்யும் சேட்டைகளை
என் கவலைகள் மறந்திட
ரசித்தேன்..

உன் வெண் பாதங்களில்
நீ நடந்திட வீடெங்கும்
உன் கால் தடங்கள்..

வீடெங்கும் சிதறி கிடக்கும்
குப்பைகள் ஆனாலும் வெளியில்
கொட்ட மனம் வரவில்லை..

எப்படி அதை வெளியில் கொட்டுவேன் அனைத்திலும்
பதிந்திருக்கிறது உன் ஞாபகங்கள்..

உன் செல்ல சிணுங்கள்களில்
என் பொய் கோபமும்
தோற்று போனது..

வீட்டு சுவரெங்கும் நீ எழுதிய
கிறுக்கல்கள் அழித்திட மனம் வரவில்லை..

நீ எழுதிய கிறுக்கல்களும்
எனக்கு பொக்கிஷமே..

ஆயிரம் செல்வங்கள் கொட்டி
கிடந்தாலும் நீ போதும் எனக்கு
மழலை செல்வமே..

'அம்மா' என்று நீ அழைத்திடும்
அந்த ஒரு சொல்லில்
என் வாழ்வின் ஜீவன் அடங்கியிருக்கிறது..

அனைத்து அம்மாக்கள் மற்றும்
குழந்தைகளுக்கு என் இனிய
குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்...

கவிதையுடன்
உங்கள்
கா. அம்பிகா

எழுதியவர் : கா. அம்பிகா (14-Nov-16, 3:58 pm)
Tanglish : mazhalai selvam
பார்வை : 292

மேலே