அரசன் எவ்வழி

நாடு மக்கள் நலம் பெறும்
நல்ல நல்ல திட்டங்கள்
இன்னும் இன்னும் உருவாக வேண்டும்
கந்து வட்டி, உயரும் வீட்டு வாடகை
அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி
பதுக்கும் பொருட்கள், பறிக்கும் சொத்துக்கள்
எதற்கும் ஒரு வரையறை வேண்டும்
மக்கள் ஒவ்வொருவரும் மனதளவில்
பாகுபாடின்றி ஏற்றஇறக்கம் இன்றி
வாழ, அமைதியான வாழ்வில்
அனைவரும் அன்புடன் இணைந்து வாழ ,
இத்தகைய பல திட்டங்களால் மட்டுமே
செயலாக்க, இயல்பாக்க இயலும்
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.

எழுதியவர் : (14-Nov-16, 2:08 pm)
Tanglish : arasan evvazhi
பார்வை : 2172

மேலே