எதனால் எது அருமை

அன்பின் அருமை
தனிமையில் தெரியும்..

உறவுகளின் அருமை
பிரிவில் தெரியும்..

நண்பர்களின் அருமை
கஷ்டத்தில் தெரியும்..

பெற்றோரின் அருமை
நாம் பெற்றோர் ஆகும்
போது தெரியும்..

தண்ணீரின் அருமை
தாகம் தணியும்
போது தெரியும்..

நேரத்தின் அருமை
தேர்வில் தெரியும்..

விநாடியின் அருமை
விளையாட்டு போட்டியில் தெரியும்..

தாய்மையின் அருமை
குழந்தை சிரிப்பில் தெரியும்..

மனைவியின் அருமை
வீட்டின் வெறுமையில் தெரியும்..

பூவின் அருமை
அதன் வாசத்தில் தெரியும்..

மழையின் அருமை
வறண்ட பூமிக்கு தெரியும்..

மொழியின் அருமை
பேச்சில் தெரியும்..

காதலின் அருமை
புரிந்து கொள்ளுதலில் தெரியும்..

வாழ்கையின் அருமை
சேர்ந்து இருத்தலில் தெரியும்..

சிரிப்பின் அருமை
துயரத்தில் தெரியும்..

பணத்தின் அருமை
ஏழைக்கு தெரியும்..

உணவின் அருமை
பசியில் இருப்பவனுக்கு தெரியும்..

சூரியனின் அருமை
அந்தி சாயும்
போது தெரியும்..

கடலின் அருமை
அதில் கால் நனைக்கும்
போது தெரியும்..

உந்தன் அருமை
எனக்கு தெரியும்..

எழுதியவர் : கா. அம்பிகா (12-Nov-16, 12:29 am)
பார்வை : 338

மேலே