ஏது வாழ்வு

வானின் நிலவு
என் மனதின் ஒரு கனவு

நிலவும் இரவு
புதிதாய் கவிதை வரவு

வெளியே இருட்டு
என் இதயம் திருட்டு

கண்டுபிடிக்க முயற்சி
தினம் தினம் பயிற்சி

கண்டேன் உன்னை
மறந்தேன் என்னை

பிறந்தது அன்பு
மலர்ந்தது மகிழ்வு

நீ இருந்தால் உலகம் அழகு
நீ இல்லையேல் ஏது வாழ்வு பிறகு....

எழுதியவர் : கிரிஜா.தி (14-Nov-16, 9:52 am)
Tanglish : aethu vaazvu
பார்வை : 81

மேலே