கிரிஜா தி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : கிரிஜா தி |
இடம் | : பனப்பாக்கம் |
பிறந்த தேதி | : 30-Sep-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 2219 |
புள்ளி | : 334 |
மழை துளியின் தீவிர ரசிகை நான் .....
கடல் மேல் அலாதி ஆசை கொண்ட மேகம் நான் .....
புல் மேல் படரும் பனித்துளிகளுடன்
பேசும் சூரியனின் கதிர் ஒளி நான் ....
இயற்கை மேல் காதல்
கொண்ட காதலி நான் ...
தமிழ் மேல் காதல் கொண்ட பாரதியின்
தூரத்து உறவு நான் ....
வார்த்தைகள் ததும்பும் இடத்தில் உருவாகும்
கவித் துளி நான் .....
உன்னோடு பொழுதுகள்
கண்ணோடு சொர்க்கமடி
என்னோடு சிறகுகள்
உன் பார்வையில் முளைக்குமடி
மடிசாய்ந்த மாலைகள்
மனமோடு பேசுதே
முடி கோதி விரல்கள்
முந்நூறு கதை பேசுதே
ஏதிர்பாராத சந்திப்பு
மதிமயங்கி போகுதே
எதிர்பார்த்து உன்னையே
என் விதி தேடுதே
உன் வருகைக்காக
வழி தோறும்
வாசமில்லா புன்னகையும் பூக்குதடி!
பேருந்து பயணம்
ஜன்னலோரம் அறிமுகமானாய்
மேகமாய் என் உரையாடல்களில் தொடர்ந்தாய்
மழையாய் குறுஞ்செய்தியை பொழிந்தாய்
உரையாடல்கள் உணர்வோடு
உண்மையாய் நட்பாய் இருந்தது
உன் குரல் கேட்டே விடிந்தது
என் காலைப் பொழுது
என் செவி சேர்ந்தே
முடிந்தது உன் இரவுப்
பொழுது
எப்பொழுதும் உரிமையாய் அழைத்திடுவாய்
இப்பொழுது உரிமையின்றி அன்னியமாய்
போகிறாய்
நட்பே
நீ சிரித்த பின்பு
சில்லறை கொடு
என்று நடத்துனர்
கேட்பதே இல்லை ....
பேருந்து பயணத்தில்
ஒவ்வொரு
நிறுத்தத்திற்க்கும்
நிறுத்தாமல் ஓடுகிறது
உன்னை பற்றிய கவிதைகள்
மனதினுள் ...
பட்டு சேலை கட்டி
நீ நடந்து வந்தா மூச்சு முட்டுதடி
பட்டு பூச்சியெல்லாம்
பறந்து போக உன் சாயல் தானடி
குலுங்கும் வளையல் சிணுங்குகையில்
குயில் பாட்டு காதில் கேட்குதடி
உன் நெற்றி பொட்டு
நடுவுல தான்
சூரியன் உதயமாகுதடி
உன் உதட்டு ரேகையில
என் எதிர்காலம் தெரியுதடி
உன் கருங்கூந்தலில் தான்
குறிஞ்சிப் பூவும் பூக்குதடி
நித்தம் நித்தம்
உன் நினைப்பில் தான் என் பொழுதுகள்
கழியுதடி
ஈரமான மணலில்
நானும் உந்தன் நினைவில்
நடந்தே நகரும் போது
தேங்கி நிற்கும் மழை நீரில் எல்லாம்
வானவில்லாய் உன் முகம் .....
கவியுடன்,
கிரிஜா.தி
நாடா கரையை கடக்கிறது
நிலவும் வானிலை
உன்னை நாடிடவே
மனமும் துடிக்கிறது ....
மழை மனதையும்
சேர்த்தே நனைக்கிறது
நிதம் உன்னையே
அதுவும் நினைக்கிறதே ...
வழிந்த துளிகள்
சாலையில் உருண்டோடுது
விழியில் துளிகள்
உன் நினைவில் உருண்டோடுது ....
புயல் எச்சரிக்கை
விடுத்து செய்திகள் பரந்தோடுது
நிவாரண நிதியாய்
ஒரு முத்தத்தை தான் கேட்குது ....
கவியுடன்,
கிரிஜா.தி
முத்துக்கும் மாணிக்கத்திற்கும்
வித்தியாசம் தெரியாததால்
பாண்டியனுடன் ஊரையே எரித்தாள்
கண்ணகி,
இன்றிருந்திருந்தால்
கறுப்புக்கும்வெள்ளைக்கும்
வித்தியாசம் தெரியாத
மோடியுடன் இந்தியாவையே
எரித்திருப்பாளோ!
அழியாத வீர வரலாறு
....................................................
உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய்
உயிரைக்கொடுத்த மாவீரர்கள் தினமிது
மண்ணுக்குள் மாண்டாலும் மனித மனங்களில் முடி தரித்து வேங்கைகளாய் வீற்றிருக்கும் வீர நாயகர்களின் வீரத்தினமிது.....
நெஞ்சில் உதிரம் ஊற்றெடுத்தாலும் பகைவர் முன் நெஞ்சை நிமிர்த்தி போரிட்டு மடிந்த தமிழீனத்தின் தன்னிகரில்லாத்தலைவர்களின் திருநாளிது
தோட்டாக்கள் உடலை பிளந்தாலும் புறமுதுகிட்டு ஓடாது வேங்கையாய் எதிரியின் நெஞ்சை பிளந்து வெற்றிக்கொடி நாட்டிய வீரமரணமடைந்த அஞ்சா நெஞ்சர்களின் அழியாத காவியத்திருநாளிது....
பாசம் துறந்து புலி வேசமிட்டு ஈழத்தமிழர
உன் குழந்தை சிரிப்பினில்
இந்த உலகினை மறந்தேன்..
உன் மழலை மொழியில்
செந்தமிழும் உன்னிடம்
மொழி பயிலுதடி..
உன் பிஞ்சு கைகளில்
நீ செய்யும் சேட்டைகளை
என் கவலைகள் மறந்திட
ரசித்தேன்..
உன் வெண் பாதங்களில்
நீ நடந்திட வீடெங்கும்
உன் கால் தடங்கள்..
வீடெங்கும் சிதறி கிடக்கும்
குப்பைகள் ஆனாலும் வெளியில்
கொட்ட மனம் வரவில்லை..
எப்படி அதை வெளியில் கொட்டுவேன் அனைத்திலும்
பதிந்திருக்கிறது உன் ஞாபகங்கள்..
உன் செல்ல சிணுங்கள்களில்
என் பொய் கோபமும்
தோற்று போனது..
வீட்டு சுவரெங்கும் நீ எழுதிய
கிறுக்கல்கள் அழித்திட மனம் வரவில்லை..
நீ எழுதிய கிறுக்கல்களும்
எனக்கு பொக்கிஷமே..
மஞ்ச தாலிகட்டி
நீ
மஞ்சபூசும்
அழகுல
எனக்கும்
லேசா
கூசுதடி
உன்
மச்சம்
பார்த்த
அழகுல
மிச்சம் பார்க்க
தோணுதடி
நீ
தவனிக்கட்டும்
அழகுல
மனசு
செக்குமாடா
சுத்துதடி
நீ
புல்லுக்கட்ட
தூக்கையில
மனசு
மல்லுக்கட்ட
தோணுதடி
நீ
மச்சானு
சொல்ல
வெயிலும்
குளிரா
மாறுதடி
உன்ன
மஞ்ச தாலிகட்டி
சொந்தமாக்க
நெஞ்சு துடிக்குதடி
ஜெகன் ரா தி
“இரசிக்கத் தெரியாதவன்!
இரசனை இல்லாதவன்!
கல் நெஞ்சக்காரன்!”
என்று கடிந்திருக்கும் அந்த மலர்.
நான் எப்படி விளங்கவைப்பேன்
அதன் அருகாமையால்
அசைவற்றுப் போனவன் என்பதை.
-இப்படிக்கு மரம்.