நட்பே போகாதே

பேருந்து பயணம்
ஜன்னலோரம் அறிமுகமானாய்

மேகமாய் என் உரையாடல்களில் தொடர்ந்தாய்
மழையாய் குறுஞ்செய்தியை பொழிந்தாய்

உரையாடல்கள் உணர்வோடு
உண்மையாய் நட்பாய் இருந்தது

உன் குரல் கேட்டே விடிந்தது
என் காலைப் பொழுது

என் செவி சேர்ந்தே
முடிந்தது உன் இரவுப்
பொழுது

எப்பொழுதும் உரிமையாய் அழைத்திடுவாய்
இப்பொழுது உரிமையின்றி அன்னியமாய்
போகிறாய்

நட்பே

எழுதியவர் : கிரிஜா.தி (2-Apr-17, 9:25 pm)
Tanglish : natpe pogaathae
பார்வை : 618

மேலே