உழவரின் நண்பன்மண்புழு

மண்ணும் பொன்னாகுமே உன்னால்
மண்ணில் வளைந்து,நெளிந்து,நுழைந்து நீ ஆடும்
உற்சாக விளையாட்டால்
உருவானது மண்ணின் செழுமை
இயற்கை உரமாக உன் கழிவு இருக்க
செயற்கை உரத்திற்கு இங்கென்ன வேலை?
உன் வாழ்வாதாரமே மண்தான் எனும்போது
எங்களின் வாழ்வாதாரம் செழிக்குமே உன்னால்.