அழியாத வீர வரலாறு

அழியாத வீர வரலாறு
....................................................
உறக்கம் தொலைத்து தமிழ் மண்ணிற்காய்
உயிரைக்கொடுத்த மாவீரர்கள் தினமிது
மண்ணுக்குள் மாண்டாலும் மனித மனங்களில் முடி தரித்து வேங்கைகளாய் வீற்றிருக்கும் வீர நாயகர்களின் வீரத்தினமிது.....
நெஞ்சில் உதிரம் ஊற்றெடுத்தாலும் பகைவர் முன் நெஞ்சை நிமிர்த்தி போரிட்டு மடிந்த தமிழீனத்தின் தன்னிகரில்லாத்தலைவர்களின் திருநாளிது
தோட்டாக்கள் உடலை பிளந்தாலும் புறமுதுகிட்டு ஓடாது வேங்கையாய் எதிரியின் நெஞ்சை பிளந்து வெற்றிக்கொடி நாட்டிய வீரமரணமடைந்த அஞ்சா நெஞ்சர்களின் அழியாத காவியத்திருநாளிது....
பாசம் துறந்து புலி வேசமிட்டு ஈழத்தமிழர்களின் சுவாசத்திற்காய் தம் சுவாசம் இழந்த வெற்றிவீரர்களின் பொன்னாளிது
ஆயுதமேந்தி தமிழீழ விடுதலைக்காய் விண்ணகம் சென்ற மாவீரர்களின் சரித்திரம் போற்றும் நன்நாளிது.....
அகிலமே அழிந்தாலும் அனைவர் நெஞ்சங்களிலும் உறையாது வீற்றிருப்பர் ஈழமண்ணிண் மாந்தர்கள்....
உடலின் ஒரு துளி இரத்தமும் உரக்கச்சொல்லிடுமே உயிர்த்தியாகம் செய்த
மாவீரர்களின் மாபெரும் வீர வரலாற்றை....