மாமியார் மருமகள்

அகலில் ஏற்றிய அணையாத விளக்கு...
அகத்தில் ஒளிர்விடும் அன்பில் கிழக்கு...
பாசத்தின் பிணைப்பில் பங்கேற்க வந்தவள்...
வாசல் விட்டு வாசல்வந்த மருமகள்......


ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...
ஆண் மகனைப் பெற்ற அன்னை...
கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்...
பெற்று வளர்க்காத மகளின் மாமியார்......


அன்பு கொண்ட நெஞ்சம் இரண்டும்
அன்றில் பறவைகளாய் என்றும் வாழ்ந்தால்
ஆனந்தத்தின் எல்லைக்கு அளவே இல்லை...
ஆகாயத்தின் நிலவு தேய்வது மில்லை......


காலையில் எழுந்து மாலையில் வரை
வேலைகள் செய்வதில் சண்டைகள் போட்டால்
வீட்டின் வெளிச்சம் வீதிக்கு வரும்...
பூட்டிய கதவில் விரிசல் விழும்......


மகனிடம் அன்புசெய்வதில் அவளுக்கு இடைஞ்சல்...
மன்னவனிடம் அன்புசெய்வதில் இவளுக்கு இடைஞ்சல்...
தெரிந்து கொண்டு வாழ்வதைக் காட்டிலும்
புரிந்து கொண்டு வாழ்வதே நலம்......

எழுதியவர் : இதயம் விஜய் (27-Nov-16, 10:19 pm)
Tanglish : maamiyaar marumagal
பார்வை : 4345

மேலே