எனது கவிதை

வார்த்தை
அமைப்புகளால்
கோர்த்து கட்டிய
கல்லறை..

பகலின்
வெறுமையாய்
இருளின்
புதிராய்..

மெழுகின்
ஒளியாய்
சில நேரங்களில்
உருகும்..

மலரின்
இதழ்களை
உதிர்த்ததாய்
மணக்கும்..

வறண்டு
வீசும்
காற்றாய்
சமயங்களில்..

துணையில்லா
பறவையின்
ஒற்றைக் குரலாய்
ஒலிக்கும்..

எனது கவிதைகள்.!

விஜயகுமார் வேல்முருகன்

எழுதியவர் : விஜயகுமார் வேல்முருகன் (27-Nov-16, 10:21 pm)
Tanglish : enathu kavithai
பார்வை : 137

மேலே