விஜயகுமார் வேல்முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  விஜயகுமார் வேல்முருகன்
இடம்:  'சென்னை-வடசென்னை தமிழ்நாட
பிறந்த தேதி :  28-May-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Apr-2015
பார்த்தவர்கள்:  82
புள்ளி:  36

என் படைப்புகள்
விஜயகுமார் வேல்முருகன் செய்திகள்

மௌனத்தின் ஓசையும் அடங்கிப்போனது
சில்லென்ற குளிர் இரவில்
ராப்பாடகனின் எங்கோ மெல்லிய
இசையில் இருளும் கரைந்தது.!

மழைத் தூறலின் சாரலில் நனைந்த மின்கம்பம் அழுதே வடித்தது
மங்கிய ஒளித் தாரைகளை
அதில் தொங்கிய ஈசல்களாய் நினைவுகள்.!

குளிரிலும் குளிரா நிலையில்
இரு இதயங்கள் தவியாய் தவித்தன
இங்கொன்றும் அங்கொன்றுமாக
நினைவுகளை மறக்கமுடியாத மனதோடு.!

நேரமும் நகரமுடியா வேதனையோடே
நகர்ந்து கடந்தே முடிந்தன
தெருவோரம் நிற்கும் தெருவிளக்கோடு
சாய்ந்து உறங்கா நினைவுகள்.!

மேலும்

ஆம்..மிக்க நன்றிகள்.. 04-Nov-2016 1:10 pm
மிக்க நன்றிகள் நட்பே 04-Nov-2016 1:09 pm
உறங்கா இனிய நினைவுகளில் இதயம் கிறக்கம். வாழ்த்துக்கள்.... 03-Jun-2016 8:47 am
நினைவுகள் என்றும் மனதிலிருந்து விலகிச் சொல்வதில் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 02-Jun-2016 2:34 pm

உன்னோடு ஒன்றினேன்.!
~~~~~~~~~~~~~~~~~~~

ஒப்பில்லாத் தமிழன்னையே
தாலாட்டின் இன்னிசையில்
மூழ்கியே தினம்
உன்னோடு ஒன்றினேன்.!

அகரத்தின் முதலெழுத்தை
கைப்பற்றி எழுதிய
ஆசானின் அருந்தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!

பண்பாக பலக் கவிதை
படைத்திடும் கவிஞர்கள்
கைவண்ண கவித்தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!

எண்ணிய வேகத்தில்
ஊற்றாக சுரந்திடும்
முத்தமிழ் சுவையே
உன்னோடு ஒன்றினேன்.!

உயிரின் மூச்சாகவும்
பேச்சின் வீச்சாகவும்
உணர்வில் கலந்த தமிழே
உன்னோடு ஒன்றினேன்.!

மூச்சரும்* வேளையிலும்
முத்தான என் தமிழே
அமுதே உனைக் காத்தே
உன்னோடு ஒன்றிடுவேன்.!

(மூச்சரும்*_ உயிர் பிரியும்)

விஜயகுமார் வேல்முருகன்

மேலும்

நன்றிகள் பல 04-Nov-2016 1:07 pm
மிகவும் நன்றிகள் 04-Nov-2016 1:06 pm
இனிமையான வரிகள்..சுமைகள் ஆயிரம் காதல் தந்தாலும் அதையும் உள்ளம் சுகம் என்று தான் சொல்லும்..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jun-2016 5:21 am
அழகான துளிகள் அருமை. வாழ்த்துக்கள் .... 25-Jun-2016 7:43 pm

மீண்டும் வாழ்க்கை.!

இதயத்தின் ஓரம்
அழுத்திய பாரம்
இனிமையை தந்தது
தனிமையின் நினைவில்.!

பாதச்சுவடைக் காண
மீதி கனவுடன் நானும்
ஏதோ நினைவுடன்
புன்னகையுடன் நின்றேன்.!

வந்ததும் வந்தாய்
வசந்தத்தின் காற்றாய்
தந்தாய் அதிர்ச்சியை
புயலின் காற்றாய்.!

வண்ண உடையில்
பார்த்த பழகிய அழகு
வெள்ளை உடையில்
பார்த்ததும் அதிர்வு.!

ஈரமில்லா புன்னகை
பாரமானது நெஞ்சு
தூரத்தில் நின்று பேசி
போலியாய் விசாரிப்பு.!

பேச்சுக்காய் பேச
மூச்சது அடைபட
நெஞ்சத்தில் ஊசியாய்
மெல்ல இறங்கிய பேச்சு.!

அந்த நாள் பார்த்தேன்
தேவதையாய் அவளை
இந்த நாளில் ஏனோ
கைம்பெண்ணாக.!

ஏதேதோ பேசினால்
யாவும் பதியவில்லை
உணர்விழந்த
பாழும் நெஞ்சில்.!

உற்றா

மேலும்

மிக்க நன்றிகள் தம்பி.. தங்கள் ஊக்கத்திற்கும், வாழ்த்திற்கும்.. 04-Nov-2016 1:04 pm
வாழ்க்கை என்பதும் புரியாத புதிரே!இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2016 10:27 am

வெட்டியவரின் முகத்தில்
வேகமாக தெறிக்கிறது..
இளநீர்.!

வேட்டு வைக்க
வெடித்தது..
பகை.!

தலைத்தெறிக்க ஓட்டம்
நேரமானதால்..
'குடி'மக்கள்.!

வலுவான வெட்டு
கண் திறந்தது..
நுங்கு.!

மேலும்

மிக்க நன்றிங்க தம்பி 04-Nov-2016 1:01 pm
யதார்த்தமான வரிகள் 18-Oct-2016 9:15 pm

"மன" நல்லிணக்கம்..
எனது கிறுக்கல்கள்..

பள்ளிவாசல் பாங்கொலி
கேட்டதும் நிறுத்தப்படுகிறது..
பிள்ளையார் கோயில் ஒலிப்பெருக்கி.!

அம்மன் கோயில் திருவிழா
கூழ் ஊற்றுகிறார்..
முஸ்தபா பாய் குடும்பத்தாருடன்.!

ரகீமுடன் ராமும்
சைக்கிளில் விரைகின்றனர் ..
மாதாக்கோவில் திருவிழா.!

விஜயகுமார் வேல்முருகன்

மேலும்

இனம் மதம் பேதம் கடந்தவைகள் நாம் வாழும் வாழ்க்கை 05-Nov-2016 7:40 am

ஆ..கலாம்.. ஆகலாம்!

அன்பினில் ஆகலாம்-நல்
அறிவால் ஆகலாம்-தன்னை
அர்பணித்தே மனிதர் ஆ(க்)கலாம்!

ஆற்றலால் ஆகலாம்-சிறந்த
ஆளுமையில் ஆகலாம்-வீண்
ஆடம்பரம் தவிர்த்த மனிதர் ஆ(க்)கலாம்!

இன்முகம் காட்டி ஆகலாம்-தினம்
இனியவைப் பேசியே ஆகலாம்
இனிதாய் வழிநடத்தும் மனிதர் ஆ(க்)கலாம்!

ஈர்த்திடும் பேச்சில் ஆகலாம்
ஈரத்தின் நெஞ்சால் ஆகலாம்
ஈட்டியெனப் பாயாத மனிதர் ஆ(க்)கலாம்!

உறுதியுடன் உழைத்தால் ஆகலாம்
உள்ளத்தில் தேசம் நினைத்தால் ஆகலாம்
உணர்வினில் நேசமுள்ள மனிதர் ஆ(க்)கலாம்!

ஊனமனதை விட்டொழித்தால் ஆகலாம்
ஊக்கம் பிறர்க்களித்தால் ஆகலாம்
ஊதாரித் தனமற்ற மனிதர் ஆ(க்)கலாம்!

எளிமையை நினைத்தால்

மேலும்

நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Jan-2016 6:27 am

எங்கோ பிறந்து தமிழால் ஒன்றானோம்.!
~~~~~~~~~£~~~~~~~~
பிறப்பிடம் வேறாய் எங்கோ
பிறந்திடும் அருமை நட்பே
திறனுடன் தமிழில் சொல்லும்
திறமைகள் மேலும் கூட்டி
பிறமொழிப் புலமை பெற்றும்
பிழையிலாத் தமிழில் பேசி
அறமுடன் வாழும் வாழ்வை
அழகுற மிளிரச் செய்வோம்

அள்ளியே பருகும் தேனாய்
ஆவலும் தமிழில் வேண்டும்
தெள்ளிய ஓடைப் போலே
தெளிந்தநற்ச் சிந்தை வேண்டும்
கள்ளமே இல்லா தன்மை
கனிந்திடும் தமிழில் வேண்டும்
உள்ளமே கவரும் வண்ணம்
ஊக்கமும் தமிழில் வேண்டும்

கொஞ்சிடும் தமிழில் பேச
கொஞ்சமும் தயக்கம் வேண்டாம்
அஞ்சியே பேசும் நாவில்
ஆற்றலும் வளர்க்க வேண்டும்
பிஞ்செனும் மழலை கற

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே.. இன்னும் நிறைய உள்ளன. ஒரு சிறு திருத்தம் வாழ்த்துக்கள் அல்ல வாழ்த்துகள். நன்றி. 11-Jan-2016 6:07 pm
மிக்க நன்றிகள் சகோ 11-Jan-2016 6:06 pm
நன்று வாழ்த்துக்கள் 11-Jan-2016 5:54 pm
சிறப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Jan-2016 5:51 pm

கீதாரி தாத்தா.!

  "வருவோரும் போவோரும் பார்த்துக்கொண்டு தான் செல்கிறார்கள்.
யாரும் அவரை பொருட்படுத்தவில்லை.
அவரும் யாரையும் எதிர் பார்ப்பதில்லை.
கோவை பூ மார்க்கெட் பக்கத்திலுள்ள பழைய முருகன் கோவில் மண்டப வாசல் தான் அவரின் இருப்பிடம்.
சிறிது பருத்த உடல். வெண்மையும் அழுக்கும்  நிறைந்த தாடி மீசையுடன்,
மஞ்சள் நிற வேட்டியும், அழுக்கடைந்த தோள் பையுடன், சட்டைப் போடாத உருவம் தான் கீதாரி தாத்தா.

  யாரிடமும் பிச்சைக் கேட்டு கையேந்தமாட்டார். யாரும் சாப்பிட எதுவும் கொடுத்தால் வாங்கிக்கொள்வார்.
தினமும் நான் அவரை முருகன் கோவில் மண்டப வாசலில் தான் பார்ப்பது. காலையிலிருந்து மதியம் வரை அங்கிருப்பார்

மேலும்

எவ்வடிவானாலும் தாய்மையே..!

அன்னையும் ஆகினாள் அக்காள்
அனைத்தையும் சுமந்தே
தன்னையே சளைக்காமல்
திண்ணையாக்கினாள் .!

தன்னின் கடமையை முதுகில்
தன் தங்கையை இடுப்பில்
தன் தங்கையின் கடமையை கையில்
தன் சுமையென கருதாமல் சுமக்கிறாள்!

செருப்பில்லா கால்களாலும்
செருக்கில்லா மனதினாலும
உறுப்புகள் வலி கண்டாலும்
பொறுப்புடன் சுமக்கிறாள் வலிமையோடு!

பெண்மை எவ்வடிவானாலும்
தாய்மை என்பது உண்மை
மென்மை உடலானாலும்
தின்மை நிறைந்த அன்னையே
வயதில் சிறியவள் என்றாலும்
என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உன்னையே.!

படமும், பாடமும்

விஜயகுமார் வேல்முருகன்

மேலும்

எவ்வடிவானாலும் தாய்மையே..!

அன்னையும் ஆகினாள் அக்காள்
அனைத்தையும் சுமந்தே
தன்னையே சளைக்காமல்
திண்ணையாக்கினாள் .!

தன்னின் கடமையை முதுகில்
தன் தங்கையை இடுப்பில்
தன் தங்கையின் கடமையை கையில்
தன் சுமையென கருதாமல் சுமக்கிறாள்!

செருப்பில்லா கால்களாலும்
செருக்கில்லா மனதினாலும
உறுப்புகள் வலி கண்டாலும்
பொறுப்புடன் சுமக்கிறாள் வலிமையோடு!

பெண்மை எவ்வடிவானாலும்
தாய்மை என்பது உண்மை
மென்மை உடலானாலும்
தின்மை நிறைந்த அன்னையே
வயதில் சிறியவள் என்றாலும்
என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் உன்னையே.!

படமும், பாடமும்

விஜயகுமார் வேல்முருகன்

மேலும்

பணம் படுத்தும் பாடு!~~~~~~~~~~~~~~தனந்தான் உள்ளே வந்ததுமேமனந்தான் வெளியே போனதுவேகணமும் நகைத்த முகமதிலே சினமும் கடிந்து வந்ததுவே
பணமும் வந்து சேர்ந்ததுமேகுணமும் மாறிப் போனதுவேவணக்கம் வைத்து சென்றதுமேபிணக்கும் ஆகி சோர்ந்ததுவே!
பார்க்கும் பார்வை திமிராலேயார்க்கும் அஞ்சா மனிதரானார்சேர்த்த பணத்தின்  செருக்காலேமூர்க்க குணமே தினம்வளர்த்தார்
சுடுஞ்சொல் நாவில் உரைத்திட்டேகொடுந்தேள் மாயம் செய்திடுவார்இனிமை வாழ்வை தொலைத்திட்டேதனிமை சிறையில் தவிக்கின்றார்
செருக்கு குணத்தை  விடுத்தாலேவிருப்பும் அவர்மேல் வந்திடுமேமதிப்பும் தானே உயர்ந்திடுமேகொதிப்பு அகமும் அடங்கிடுமே!
விஜயகுமார் வேல்முருகன்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

Error in FriendsList::getFriendSuggestions function