நினைவுகள் (கவிதை)
மௌனத்தின் ஓசையும் அடங்கிப்போனது
சில்லென்ற குளிர் இரவில்
ராப்பாடகனின் எங்கோ மெல்லிய
இசையில் இருளும் கரைந்தது.!
மழைத் தூறலின் சாரலில் நனைந்த மின்கம்பம் அழுதே வடித்தது
மங்கிய ஒளித் தாரைகளை
அதில் தொங்கிய ஈசல்களாய் நினைவுகள்.!
குளிரிலும் குளிரா நிலையில்
இரு இதயங்கள் தவியாய் தவித்தன
இங்கொன்றும் அங்கொன்றுமாக
நினைவுகளை மறக்கமுடியாத மனதோடு.!
நேரமும் நகரமுடியா வேதனையோடே
நகர்ந்து கடந்தே முடிந்தன
தெருவோரம் நிற்கும் தெருவிளக்கோடு
சாய்ந்து உறங்கா நினைவுகள்.!