துளசி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : துளசி |
இடம் | : இலங்கை (ஈழத்தமிழ் ) |
பிறந்த தேதி | : 04-Dec-1997 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 796 |
புள்ளி | : 130 |
மார்கழி மாதம்
இளகாத மழை
மயங்கிய மேகம்
மங்கிய காட்சி
உஷ்ணம் தேடும் தேகம்
உறைந்து போன இரவு
கண்கள் விழித்து
தூக்கம் தொலைத்து
குழப்பக்கதியில் ஒரு தாய்...
அவளின் வறுமை(யை) மழை அறியாது
அதனைச் சொல்ல சொல் கிடையாது
போர்வை தேடி சேய்கள் வாட
போர்வை ஒன்றைத் தாய்மை தேட
போர்வை இன்றி கண்கள் கலங்க
சேய்கள் தூங்க
சேலை அவிழ்த்தாள்
போர்வை அமைத்தாள்
குளிரின் காமம் அவளைத் தீண்ட
வானம் அழ - அவளும் அழ
விரக்தியில் சொன்னாள்
"வா... தொடு... என்னுள் ஊடுருவு
குளிரே உன் தேடல் தீருமட்டும்..."
***
ஒரு முறை தான்
நினைத்தேன் - பல
நினைவிலே நிழலாய்
பின் ஊழள்கின்றேன்
அன்பே...
நீ என்னைவிட்டு விலகி
சென்றபோதும்...
நம் காதலின் நினைவுகளை தினம்
திரும்பி பார்த்துகொண்டு இருக்கிறேன்...
வலிகளை நீ
எனக்கு தந்துசென்றபோதும்...
இன்னும் நேசித்து கொண்டு
இருக்கிறேன் உன்னை...
நீ என்மீது கொண்ட காதல்...
மழைமேகங்களுக்கு நடுவில் எப்போதாவது
தோன்றும் வானவில்லை போல்...
உன்மீது நான் கொண்ட காதல் என்றும்
நிரந்தரமான வானம் போன்றது...
உன் நினைவுகளோடு நான் சுற்றுவதால்
உனக்கு ஏளனமாக தெரிகிறது...
வேறொரு பாவையை
நினைக்க தெரியாமல் அல்ல...
உன்னை மறக்க
எனக்கு தெரியவில்லை...
அதனால்தனாடி வேறொருத்தியை
நினைக்க தெரியவில்லை.....
தமிழச்சி கருவில்
தமிழ் போற்றும் தருவாய்
தமிழனே உருவானாய்.
***
வேயாத குடிசையில்
வழுக்கி விளையாடும் நிலாக்கள்
கற்காத அறிஞனோ?
***
தென்னாட்டு மண்ணிலே
படிக்காத மேதை இவன்
ஏழையின் தோழனோ?
***
பள்ளிப்பாதையில்
அனலாகும் போராட்ட பயணத்தில்
சிறைஎனும் பட்டம் பெற்றாயோ?
***
அலிப்பூர்,வேலூர்
இன்னும் எத்தனையோ?
உன்னிடம் தோற்ற கல்லறைகள்
***
காதல் வரும் வயதில்
புரட்சிக்காய் புறப்பட்டாய்
எழுச்சிக்காய் உரமானாய்.
***
மணிமுத்தாறு,அமராவதி
வைகை சென்று பார்த்தேன்.
உன் உதிரம் கண்டேன்
***
தாய்நாட்டு பிரசவத்தில்
அந்நியன் தொப்புள் வெட்டி
சுதந்திரம் பெற்றோம்
***
சாதியெனும் விஷபூச்ச
விழியில் ஏதே தடுமாற்றம்
வினா பொருளா ?
விடை பொருளா?
தெரிய வில்லை தெரிந்து
கொள்ளவும் விரும்பம் - இல்லை
விரைந்து ஊழழும் இரவு
பகலாய் மனதோடு
உதிர்த்த புதிர்கள்
மெளனமாய் சிக்கி
கொள்ள
பஞ்சனை மறந்து
பரிதவிக்கும் பேதையாய்
கையில் ரோயா மலரை
இறுக பற்றிய வண்ணம்
உள்ளேன் இன்று - கூட
செல்வேனே அது
தெரியவில்லை
என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான்
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என்
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான்.
இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம்.
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான்
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால்
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில்
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே
ஈரமண் தோண்டி மண்புழு பிடித்து எறும்பு கடிக்காமே
தமிழுக்காக எவ்வளவோ எழுதி குவித்து விட்டோம் இதுவரை .ஒரு எட்டு நிமிடம் தமிழனுக்காக எதையும் எழுதாமல் பார்ப்போம் .பகிர்வோம் .
மிக்க நன்றி .
அடிச்சுவடை ஆராய்ந்து அலைகிறேன்
~!மனையை விட்டு மனதை தொலைத்தபடி ~!
இறுதியில் இறப்பு நேர்ந்தாலும்
~!குருதி முழுதும் தவிப்பை நினைத்து ~!
நிலையில்லாமல் மூச்சை நிறுத்தி
~!ஏகாந்த வாழ்க்கை வாழ்கிறேன் ~!
தென்றல் கொள்ளை கொண்டதோ
~!ஆசையாய் வந்த என்னை ~!
ஓசையையும் கேட்கவிடாமல் வருடிக்கொண்டதே
~!ஒடிந்து போன கிளையை போல தலை குனிந்து ~!
மடல் நனைக்கிறேன் பாசமெனும் மழைத்துளி சிந்த
ஏதம் ஒன்றும் அறியா மனதுக்கு
~!மோசடி செய்து விட்டார் போல் ~!
குரூபம் கொண்டு நிர்ப்பந்தம் இன்றி
~!ஒப்பந்தம் செய்கிறேன் இறைவனோடு ~!
சஞ்சலமாய் ககனத்தையும்
~!வஞ்சனைதான் செய்கிறேன் ~!
தொய்ந்து போன உள்ளம்
~!தொ
பெண்ணே !
பிரம்மன் படைத்த
உயிர் பொற் சித்தரம்
நீயடி
உன்னை யாரும்
கலங்கடிக்கவும் கூடாது
உன் அழகும் யாரையும்
கலங்க வைக்கவும் கூடாது
உன் அதீத அழகை
திரை போட்டு மட்டும்
திரைச் சீலை போல
ஆடைகள் அணிந்து காட்டதே
காமுகன்கள் காத்திருக்கிறார்கள்
உன் கற்பை சூரையாட -நாய்கள்
போல மோப்பம் பிடிப்பவர்களுக்கு
வாய்ப்பாக உன் ஆடை அலங்காரம்
இருக்கவேண்டாம்
தமிழ் நாட்டு பண்பாடு-உனக்கு
இருக்கட்டும் -நீ
ஆபத்தில் இருந்தாலும் -உன்
தமிழ் பண்பாடு காப்பற்றும் -நீ
அந்நிய தேசத்தில் இருந்தாலும்
உன் கட்டழகு-நம்
நாட்டை கதற வைக்க வேண்டாம்
சிறிதளவேனும் பலாத்கார செயலை
குற
மன்பதைகளால் ஏவப்பட்ட
காற்றில் மிதக்கும் இறகே -உன்
தலை குனிந்து -இவ்
வையகத்தை உற்றுப் பார்த்து -அங்குள்ள
வெண்மை நிறக் கூட்டத்தைக் கண்டு -உன்
இறகுகளின் கூட்டம் என எண்ணி
அங்கே செல்கிறாயா காற்றில் மிதந்த படி ~
உன் கூர்மையான நுனி -நீ
இறகுகளின் வெண்மைக் கூட்டம்- என
தவறாக எண்ணிய உன் தேடல் -அங்கு
வெள்ளைப் புடவை அணிந்தது
வீற்றுஇருக்கும் அவளை தாக்கி
உதிரத்தை சிந்த விடப் போகுது -இனி
அவள் குங்குமம் இல்லாத குமுதம் ஆகிவிட்டாள் ~
அவளைக் கண்டவுடனே -அவள்
மடியில் வீழ்ந்து விட்டாயா -உனை
அவள் தன் கரங்களால் கைப்பற்றி -இரு
விரல்களைக் கோர்த்து -உனைச்
சுற்றிய வண்ணம் தன்னுடைய
துயரத்