அடிச்சுவடு ~
அடிச்சுவடை ஆராய்ந்து அலைகிறேன்
~!மனையை விட்டு மனதை தொலைத்தபடி ~!
இறுதியில் இறப்பு நேர்ந்தாலும்
~!குருதி முழுதும் தவிப்பை நினைத்து ~!
நிலையில்லாமல் மூச்சை நிறுத்தி
~!ஏகாந்த வாழ்க்கை வாழ்கிறேன் ~!
தென்றல் கொள்ளை கொண்டதோ
~!ஆசையாய் வந்த என்னை ~!
ஓசையையும் கேட்கவிடாமல் வருடிக்கொண்டதே
~!ஒடிந்து போன கிளையை போல தலை குனிந்து ~!
மடல் நனைக்கிறேன் பாசமெனும் மழைத்துளி சிந்த
ஏதம் ஒன்றும் அறியா மனதுக்கு
~!மோசடி செய்து விட்டார் போல் ~!
குரூபம் கொண்டு நிர்ப்பந்தம் இன்றி
~!ஒப்பந்தம் செய்கிறேன் இறைவனோடு ~!
சஞ்சலமாய் ககனத்தையும்
~!வஞ்சனைதான் செய்கிறேன் ~!
தொய்ந்து போன உள்ளம்
~!தொகுத்து வைக்கிறதே ஏக்கங்களை ~!
துன்மதி மறைக்க நினைத்தாலும்
~!வல்லமை கொண்டு ~!
நிச்சயம் அடைந்து விடுவேன்
குரோதம் இல்லாமல் வாழ்வை
~!வடிவமைத்து விட்டால் அன்னை ~!
பரிபூரணமாய் வாழ
~!வழியும் வகுத்து விட்டார் கடவுளும் ~!
நித்தியம் இல்லாமல் மனம் மட்டும்
~!நுழைவாயில் இன்றி அன்புக்காய் ~!
நீளுகின்றது பரிதாபமாய்
பூமகள் எனை ஏந்தினாலும்
~!பூர்வ ஜென்மமாய் நிறைவு இன்றி ~!
கண்ணீர்த் துளியும் அதிகமாகின்றது
~!மடமையான உள்ளமும்
மந்தாரமாய் மயங்குகின்றது
தெய்வமான தாயின்
~!தாலாட்டும் இருந்தாலும் ~!
தந்தையவன் மடி தேடி
~!துவண்டு நிற்கின்றது~!
மனமும் ஒருபடி உயர்ந்து
ஒவ்வொரு நொடியும்
~!விதைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் ~!
வற்றிப்போன பாலைவன நீரைப்போல
~!கண்ணீரில் சிலை வடித்து~!
வாழ்ந்து கொண்டு இருக்கிறது
தாயின் விழுப் பொருளான
~!தந்தையெனும் விதையைத் தேடி ~!
மண்டியிடுகிறேன் யுகம் முடியும் முன்பே
~!தந்தயவனை என் தலைவன் உருவிலாவது ~!
காண வேண்டும் என்று ~~~~~~~~!