குரல்கள்

நிலா விற்பவன்..
தெருவில் நுழைந்தான்..
பின்னிரவின் குளிர் கூட
திண்ணை ஒன்றில்
அவன் படுத்தான்..
பழைய காலத்து வீட்டு
திண்ணை ..
பக்கத்தில் யாரோ ஒன்றிண்டு பேர் கூடி
பேசிக் கொண்டிருக்கும் குரல்களின்
ஒலி காதில் விழ..பொறுமையாய்
கேட்டான்..
இந்த வீடு விற்கத்தான் வேண்டுமா..
மூன்று பிள்ளைகளுக்கும் இது தேவை இல்லையா..
நகரின் நடுவில் இருப்பதனால்..
விற்று கிடைக்கும் லட்சங்கள்..
இவர்கள் லட்சியமாம்..
ஏக்கத்துடன் சொன்னது ஒரு குரல்..!
விட்டு விட்டு போப்பா..
வெளி நாட்டில் ..வெளியூரில்
வேலை செய்தாலும்
வருடத்தில் ஒரு தடவை
ஒன்றாக வந்திங்கு
உறவுகள் களிப்புற
அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை..
மற்றொரு குரல்..
கிடைக்கின்ற பணம்
வட்டி தரும்..
இந்தத் திண்ணையில் விளையாடிய
நாட்களின் நினைவுகளை ..
திருப்பி தருமா..
அல்லது ..
வழிப் போக்கரானாலும்
பலருக்கு இடம் தந்து
உணவிட்ட பின் கிடைத்த வாழ்த்துக்கள்தான்
பணமாய் மாறிடுமா..
தேவையில்லை என்றாலும் ..
விற்பதென்ற முடிவுக்கு
வந்து விட்ட அவர்கள்
வழக்கின்றி வாழட்டும்..
விடப்பா..இன்னொரு குரல்..
நிலா விற்பவன் கண்களில் நீர் கசிந்தது ..
அவனை சுற்றி யாருமில்லை!

எழுதியவர் : கருணா (31-Jan-15, 12:36 pm)
Tanglish : kuralkal
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே