கருணாநிதி - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : கருணாநிதி |
இடம் | : பாண்டிச்சேரி-திருச்சி |
பிறந்த தேதி | : 25-Jun-1961 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 6865 |
புள்ளி | : 4422 |
இலக்கண-இலக்கிய பரிச்சயமில்லாத ஆனால் தமிழில் எழுத ஆர்வமுள்ள ஒரு தமிழன்!
எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!
நான் மூன்று பருவத்தினனாகவும்
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!
இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !
அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!
ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !
புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான்
பயணம் !
பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி
தொடாமல் !
எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!
நான் மூன்று பருவத்தினனாகவும்
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!
ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான்
பயணம் !
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி
தொடாமல் !
மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !....கருணா....
வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த ஆஸ்திரேலிய மலைப்பாதையில் கீழே கடல் கூடவே வருவதை ரசித்தபடி பயணம் ..இடையிடையே மழையும் இளம் வெயிலும் மாறி மாறி ..பச்சைப் பசேல் ..மழைக் காடுகள் வலது புறம் மலைச்சாரலில் ..கீழே மகா சமுத்திரம் நீலம்..நீலம் ..மார்பில் வந்து மோதும் சில்லென்ற ஊசிக்காற்று..வேடிக்கை பார்க்க வந்து அச்சத்திலோ வெட்கத்திலோ எகிறித் தாவி ஓடி மறையும் கங்காருகள் ..அழகின் உச்சம் !நீளும்..பாதை
குளிரும் நிலம், காற்று
வானின் கொடை..குடை!
சந்தோஷம்..மரத்தின் இலைகளை தீண்டும் காற்றுக்கா ..குளிர் தீண்டலில் இன்பம் கண்ட இலைகளுக்கா..? சோர்வு ..கரை தொட்டு திரும்பும் அலைகளுக்கா ..தன்னோடு இருந்துவிட விதியில்லை இந்த அலைக்கு என்று மருகும் கரைக்கா? உனக்கு பதில் தெரியும் ..சொல்லேன்..
காற்றின் தொடுதலில் இலைகள்
அத்தனையும் எனக்குள் நீயாக !
அம்மா!
அம்மாவுக்கு இன்னொரு பெயர் 'உழைப்பு'. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பாள். சும்மா இருப்பது என்பது ரொம்ப கம்மி. இப்பவும் நான் அந்த கல்யாண மண்டபத்தின் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருக்க கீழே கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தன் தங்கையின் இரண்டாவது பெண்ணின் கல்யாணம். இன்னும் கல்யாண வேலைகளை முழுமையாக கான்ட்ராக்டில் விட ஆரம்பிக்காத காலம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன். எல்லா வேலைகளையும் தானே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வாள். கொஞ்ச நாட்களாக தம்பி குடும்பத்துடன் கோழிக்கோட்டில் இருக்கிறாள். கல்யாணத்திற்க்காக ஒரு வாரம் முன் வந்திருந்தாள்.
நான் மாடியிலிருந்து பார்த்த
ஏதோ ..
தப்பு செய்து விட்டது போல்
வேகமாய் நகர்ந்து கொண்டிருந்த
மேகக் கூட்டமொன்றை
பின்தொடர்ந்தேன் ..
திரும்புகையில் ..
அவற்றில் கொஞ்சத்தை
கைது செய்து
கொண்டு வந்து கொண்டிருக்கிறேன்
இப்போது ..!
மலையில் ..
மோதிப் பிரிந்து
கலைந்த மேகங்களில் ..
கொஞ்சம்
கலந்தன .. மீண்டும் வானில்
கொஞ்சம்
பரவின .. பச்சை மரங்களில் ..
கொஞ்சம்
படர்ந்தன ..என் மேனியில் !
சில்லென்ற நினைவுகளோடும்
மேகங்களின் மிச்சத்தோடும் ..
மெல்ல கண்களை மூடியபடி
நீண்ட நாட்களுக்குப் பின்
நிம்மதியானதொரு
உறக்கத்திற்கு ஆயத்தமாகிறேன் ..!
சகியே..
**
என் முடிவுகளை எல்லாம்
நீதான் ..
தீர்மானிப்பேன் என்கிறாய்
எப்போதுமே ..!
எதிர்மறையாய் பேசுகிறாய் ..
எப்போதுமே..!
**
ஆனால் ..
எப்போதுமே..
என் முடிவுகளை
ஏற்றுக் கொள்கிறாய் ..
தோற்று தோற்று
என்னை வெற்றி காண்கிறாய் !
**
எப்போதுமே..
உனது சொல்லுக்குதான்
நான்..
கட்டுப் பட வேண்டும்
என்றே சொல்கிறாய்
**
எப்போதுமே ..
உனக்கு கட்டுப்படுவதுபோல்
நான் பேசுவதை
தெரிந்தும் கூட
எப்படி ரசிக்கிறாய் ..
..
மாறி மாறி
தோற்பதால் நாம்
இருவரும்
வெற்றியல்லவா
பெறுகிறோம்
எப்போதுமே !
………………………………
தூரத்தில் ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்
மேலே.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
சுட்டெரிக்கும் வெயில்
சற்று நேரத்திற்கெல்லாம்
நிசப்தம் கூடிய அமைதி
கரு முகில்கள் ..
இளம் தூறலாய் மழை..
குளிர்ந்த காற்று ..
அப்போதும் ..
இப்போதும்..
எப்போதும் ..
கவலையின்றி சிரிக்கும்
மலைச்செடியின் மலர்கள்..
பசுந்தென்றல் வீசும் மரங்கள்..
இன்னிசை ரீங்காரம் எழுப்பியபடி
தேனை சேகரிக்கும் தேனீக்கள் ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க வைக்கும் மலை ..
இவைகளின் நடுவே ..
பாடம் பயில்பவனாய்
மௌனமாய் ..நானும் !
உணவு....!
அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்..... நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை... காட்டாறு என்றே கொள்வோம்... அபரிமிதமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... கொஞ்சம் மேட்டிலிருந்து இறங்கும் பொழுது மீன்கள் துள்ளிக் குதித்து இறங்கியது.... கொஞ்சம் தூரத்தில் நிலம் சமனடைய நீரோட்டம் சற்று அமைதி அடைந்தது..... துள்ளிய மீன்கள் சுற்றி வலம் வந்து தன் கூட்டத்துடன் சற்று கரையருகே ஆராய்ச்சியில் இருந்தது......
தண்ணீரில் யாரங்கே ஒரு குச்சியை நட்டு வைத்தது...? இந்த நீரோட்டத்திலும் ஆடாது நிற்கும் குச்சி அந்தச் சிறிய மீனுக்கு வியப்பை உண்டாக்க தாய் மீனை அழைத்தது..... தூரத்தில் இருந்து பார்
தோழர் K .R . ராஜேந்திரன் அவர்களின் படைப்பு மீண்டும் அமெரிக்க மின் சஞ்சிகை பாலசந்திரிகை -யில்.. வாழ்த்துக்கள் திரு ராஜேந்திரன்... காண சொடுக்குக..
எழுத்து - தமிழ் கூற்று எண்ணம் போட்டி முடிவு
எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்
முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக்கொண்ட கொண்ட நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும், தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பைக் கூட பாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே.