எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எவ்வளவு அழைத்தும் வரவில்லை ..காக்கை அமாவாசை .. எனக்கோ...

 எவ்வளவு அழைத்தும்
வரவில்லை ..காக்கை
அமாவாசை ..
எனக்கோ பசி ..!



நான் மூன்று பருவத்தினனாகவும் 
மாறி மாறி பேசிப் பார்க்கிறேன் ..
அவள் புன்னகையில்
சந்தேகம்!

இளங்குளிர் காற்றில்
பனிமலையில் அவளோடு
கைகோர்த்தபடி நடக்கிறேன்..
இளஞ்சூடு !


அவள் உதிர்க்கும்
ஒவ்வொரு வார்த்தையையும்
மனனம் செய்து கொள்கிறேன் ..
உதவும்..!


ரசிப்பதை
மறைத்துக் கொள்கிறேன்
உலக விஷயங்கள்
பேசிக்கொண்டே !
ஏதோ ஒரு பறவையின்
அந்தி நேர கூவல்
அவளது வளையோசை
பிடிக்கிறது !


புரிபடாத அவளின் நகர்வுகள்
மேலே ஒரு பறவை
நிழலின் வழிதான் 
பயணம் !


பக்கத்தில் ஆறு
எங்களோடு கூடவே
நகர்கின்றது ..மனமின்றி 
தொடாமல் !


மழை வரும் போலிருக்கிறது
என்கிறேன் ..
குடை வேண்டாம்..
வரட்டும் என்கிறாள் !....கருணா....  

பதிவு : கருணாநிதி
நாள் : 21-Nov-17, 6:38 am

மேலே