எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த...

  வளைந்து ஏறி இறங்கி குறுகி பெருகி ஓடும் இந்த ஆஸ்திரேலிய மலைப்பாதையில் கீழே கடல் கூடவே வருவதை ரசித்தபடி பயணம் ..இடையிடையே மழையும் இளம் வெயிலும் மாறி மாறி ..பச்சைப் பசேல் ..மழைக் காடுகள் வலது புறம் மலைச்சாரலில் ..கீழே மகா சமுத்திரம் நீலம்..நீலம் ..மார்பில் வந்து மோதும் சில்லென்ற ஊசிக்காற்று..வேடிக்கை பார்க்க வந்து அச்சத்திலோ வெட்கத்திலோ எகிறித் தாவி ஓடி மறையும் கங்காருகள் ..அழகின் உச்சம் !நீளும்..பாதை 


***


குளிரும் நிலம், காற்று 
வானின் கொடை..குடை!  

பதிவு : கருணாநிதி
நாள் : 21-Nov-17, 6:36 am

மேலே