அனுபவத்தின் குரல் - 31 ************************ ஒரு செயலை...
அனுபவத்தின் குரல் - 31
************************
ஒரு செயலை செய்து முடித்திட அல்லது எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்றிட நினைக்கும் எவரும் அதற்கு திட்டமிடல் வேண்டும். சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்திடல் அவசியம் .
காரணம் வாய்ச்சொல்லில் வரைகின்ற ஓவியமாக இருந்தால் அது எப்படி காற்றில் கரைந்து விடுமோ பேச்சளவில் மட்டுமே செயல்கள் இருந்து விடாமல் , செய்ய நினைப்பதை முழுமை பெறும் அளவிற்கு திட்டமிட்டபடி செயல்பட வேண்டும். இல்லையெனில் காரியங்களை சாதிக்க முடியாது.
பலரின் விருப்பங்கள் எண்ணங்கள் நிறைவேறாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.அதுமட்டுமன்றி அத்தகைய செயல்களுக்காக திட்டமிட அனுபவம் மிக்கவர்கள் அல்லது அறிவார்ந்தவர்களை கலந்து ஆலோசனை பெறுவதில் தவறில்லை.
இதில் கெளரவம் பார்க்கக்கூடாது.எனது அனுபவத்தின் எதிரொலியே இந்த பதிவு
பழனி குமார்