எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நிம்மதி இதைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது... வாழ்க்கையில்...

நிம்மதி
இதைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது...

வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் ஏதாவது ஒரு பாடம் கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம்.. 
ஆனால் மனிதர்களை புரிவதில் தவறிழைத்து விடுகிறோம்..
ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்,
உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி ஆனவர்கள் அல்ல..
புரிதலிலும் நிம்மதி பரிபோகும்...

இல்லாதவனுக்கு பொருள் ஈட்ட ஓட்டம், இருப்பவனுக்கோ இருப்பதை மேலும் சேர்க்க ஓட்டம்.. 
இதற்கிடையில் நிம்மதி எங்கே கிடைக்கும்..

பணம்
வெறும் காகிதம் தான், ஆனால் அதற்கு இருக்கும் மதிப்பு மனிதற்கு இல்லை..

தனிமை சிரிப்பில், 
உணவு உண்ணும் நேரத்தில், 
மாலை நேரத்து மழையில், 
உறவுகள் கூடும் பண்டிகை நாட்களில், நில்லாது ஓடும் வேலை அவசரத்தில், 
உடன் பிறந்தோர் குழந்தைகளுடன் விளையாடுகையில் நம்மை அறியாமலேயே மனதில் ஒரு வெறுமை தோன்றும்...
நமக்கென்று யாராவது இருக்கிறார்களா என்று... 
எப்போது வேண்டுமானாலும் நிம்மதி பரிபோகலாம்... 

ஏழை என்றால் ஒரு வேளை உணவில் நிம்மதி
பணம் படைத்தவன் என்றால் ஆடம்பரத்தில் நிம்மதி
வள்ளல் என்றால் ஈவதில் நிம்மதி
வீரன் என்றால் வெல்வதில் நிம்மதி
போர் என்றால் வெற்றியில் நிம்மதி
உறவுகள் என்றால் கூடி இருந்தால் நிம்மதி
விரோதி என்றால் விலகி இருத்தலில் நிம்மதி
நண்பன் வறுமையிலும் உடன் இருத்தல் நிம்மதி
ஒவ்வொரு சூழ்நிலையிலும் வெளியே தேடுவோம் நிம்மதியை,
உன்னுள்ளே ஒளிந்திருக்கும் நிம்மதி
பல சமயங்களில் உள்ளம் தேடுபவரிடத்தில் ஒளிந்திருக்கும் நிம்மதி 
வாழ்வில் எல்லா இன்னல்களுக்கும் அருமருந்தே இந்த நிம்மதி... 

நிம்மதி இதைத் தேடாதவர்கள் யாரும் இருக்க முடியாது.... 

நாள் : 21-Nov-17, 8:40 am

மேலே