எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தேடல்.
*******
தேடல் வாழ்க்கையை செப்பனிடும் கருவி,
புது மாற்றத்தை உண்டாக்கும் பிறப்பிடம்,
திசைகள் தோறும் கைகாட்டிகள் இங்கே
செல்லும் பாதைகள் ஏராளம்...ஏராளம்!

பொருள் தேடலில் புதைந்து போனவர்கள்,
அறிவுத் தேடலில் கரைந்து போனவர்கள்,
காதல் தேடலில் மதியிழந்தவர்கள், இவர்கள்
வாழ்க்கைத் தேடலில் வாழ்வைத் தொலைத்தவர்கள்!

நாகரீகமற்ற தேடலில் நலிவுற்றுக் கிடக்கிறது
நாளைய சமுதாயத்தின் ஆணிவேர்,
விவேகமற்ற தேடலில் தொலைத்து நிற்கிறது
விலை மதிப்பில்லா நேரமும் நேசமும்!

தேடுதலில் தேடிவரும் அன்பை விலக்கி விடாதே,
பின் தேடினாலும் கிடைக்காது போகலாம்.!

நேற்றைய பொழுது நம்மிடமில்லை,
நாளைய பொழுது நிச்சியமில்லை,
இன்றைய பொழுது நம்மிடம்...தேடு!
*************************

மேலும்

அனுபவமே ஆயுள் ரேகை.
****************************
காலம் போகிற வேகத்துக்கு
கற்ற பாடங்களால் வாழ்வில் கரை சேர முடியவில்லை,
செவிமடுத்த அறிவுரைகளும் செயலழிந்து போகின்றன,
காணும் காட்சிகள் பொய்த்துப் போகின்றன,

ஒற்றுமை இங்கு மதத்தாலும் இனத்தாலும் 
குடை பிடித்து வாழ்கிறது,
அன்பு பாசம் நேசங்கள் யாவும்
முகமூடியணிந்து சுயமிழந்து நிற்கிறது,
உணர்வுகள் ஊனமாகி கிடக்கிறது,

அப்பா சொன்னதும் 
ஆசிரியர் சொன்னதும்
அந்தந்த வேளைக்கே அர்ப்பணமாகிறது,

தேடலில் கிடைப்பதே வாழ்க்கையாகிறது,
நடக்கும் போது குத்தும் முள்ளே
அறிவுரை சொல்கிறது,
சிந்தும் இரத்தங்களே சிந்தனையைத் தூண்டுகின்றன,
உழைக்கும் போது ஏற்படும் வலியே
வாழ்வின் மேன்மையை போதிக்கிறது,
வலியும் வேதனையுமே
வாழ்க்கையை செப்பனிடுகிறது,
ஒவ்வொரு அனுபவமும்
ஒரு வயதைக் கூட்டுகிறது,
இங்கே அனுபவமே ஆயுள் ரேகை!
****************************

மேலும்

அச்சம்தவிர்.
*************
அழகிய பெண்ணே அடிமைப் படாதே,
இளகிய மனதால் இரையாகி விடாதே,

பாதைகள் தோறும் நெருஞ்சி முட்கள்
பயந்து வாழ்க்கையை நிறுத்தி விடாதே,

வாழ்க்கை வசந்தமென நினைத்து விடாதே,
வாழ்வது நரகமென ஒதுங்கி விடாதே,

ஏழ்மையை நினைத்து வருத்தம் கொள்ளாதே!

கற்பு என்று சொல்லி கலவரமூட்டுவர்,
கண்ணகியாய் இருவென்று சுட்டிக் காட்டுவர்,

ஆண்பெண் நட்பை காதலென்று சொல்லுவர்,
அண்ணன் தங்கையென்றாலும் அவதூறாய்ப் பேசுவர்!

வீழ்வதற்கு பிறக்கவில்லை பூமியில்,
வாழ்வதற்கு பிறந்தோமென்று வைராக்கியம் கொள்,

ஆணும் பெண்ணும் பேதமில்லை அறைந்து சொல்லி விடு,
நீயும் நானும் ஒன்றென்று 
குரலை உயர்த்திடு,

நெஞ்சம் நிமிர்த்தி
நெஞ்சில் அச்சம் தவிர்த்திடு!
***************,************

மேலும்

புத்தம் புது பூமி வேண்டும்.
**************************

புத்தம் புது பூமி வேண்டும்,அதில்..
நல்லவர்கள் ஆண்டிட வேண்டும்,
நல்லாட்சி மலர்ந்திட வேண்டும்,
குற்றங்களில்லா நிலை  வேண்டும்,
சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்,

போதுமென்ற குணம் வேண்டும்,
பிறர்க்கு கொடுத்துதவும் மனம் வேண்டும்,
தீயவை தீய்ந்து போக வேண்டும்,
திருந்தாத மூடவர் ஒழிந்திட வேண்டும்,

மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்,
மனிதம் போற்றப்பட வேண்டும்,
மது அருந்தா மக்கள் வேண்டும்,
மங்கையர்களை மதிக்க வேண்டும்,

இறைவனை தொழ வேண்டும்,
இயற்கையையும் தொழ வேண்டும்,
மண் விளையும் பூமி வேண்டும்,
மக்கள் நலன் காக்க வேண்டும்,

சமமான கல்வி வேண்டும்
சாதிகள் ஒழிந்து சமத்துவம் வேண்டும்.
**************************

மேலும்

விடியலைத்தேடி.
******************
பண்பும் பாசமும் 
பணத்துக்கு அடிமையாகிப் போனது,

அணைக்கும் கைகள் 
அரிவாள் தூக்கும் கைகளாக மாறுது,

ஏய்த்துப் பிழைப்பதே உழைப்பென
உழைப்பவனின் மனம் மாறுது,

அறிவியல் வளர்ச்சியில்
உறவுகள் சிதைந்து வாழ்வின் 
உன்னதம் மறைந்து போனது,

காசிருந்தால் கல்லும் கடவுளாகும்
காசுக்கு அந்தக் கடவுளும் விலை போகுது,

வெளிச்சத்தில் இருந்து கொண்டே
வாழ்க்கை விடியலைத் தேடுகிறத

மேலும்

சிறகை விரித்திடு.
*******************
காலைக் கதிரவன் உதிக்குது,
கண்களில் ஒளி மிளிருது,
கவலைகள் யாவும் ஒழியுது,
வாழும் வாழ்க்கை குறுகியது,
பிறர் மனம் நோகாமல் 
வாழ்த்தியே வாழ்ந்திடுவோம்,
விரிந்த வானம் நமக்காக காத்திருக்கு,
மனதில் புதிய சிந்தனை பிறந்திருக்கு,
வானில் பறக்க சிறகை விரித்திடு

மேலும்

எண்ணிலடங்கா கேள்விகள் 

          மனதில் 
பதில்களை தேடி நடக்கிறேன் 
        தினமும்...!!

மேலும்

கணக்கற்ற தவறு செய்து

என்ன ஒரு இறைவன் அவன்

எண்ணி எண்ணி வியக்கிறேன் - அவனோ

எண்ண ஓட்டத்தை நம் நெஞ்சில் வைத்து

ஏளனமாய் சிரிக்கிறான்


கண்ணில் காணும் பொருளை எல்லாம்

மனிதன் கைக்கொள்ளத் துடிக்கிறான்

கைப்பற்றிய பின்னால் அவனும்

காப்பாற்ற வேண்டுகிறான்


வளமாய் வாழ்க்கை வாழ

வஞ்சிக்க நினைக்கிறான்

வேண்டாத செயலைச் செய்து

வேண்டியதை இழக்கிறான்


கண்டபடி எண்ணங்கொண்டு

காரிருளில் மூழ்குறான்

கணக்கற்ற தவறு செய்து

காண்போரை மிரட்டுறான்


தன் பலம் குறையும் போது

பணப் பலத்தால் அலையுறான்

பயமே அறியாதவன் போல்

பம்மாத்து வேலை செய்யுறான்


தான் தோன்றி தானமாய் அலையும்

மனிதனை அழித்திட  

தரணியில் இறைவன் ஒரு நாள்

சுயம்பாகவே வந்திடுவான்.

--- நன்னாடன்.

மேலும்

வாலில்லா குரங்குகள் ஆடும் பகடி ஆட்டத்தில் பகடைக்காய்களாய் வாலில்லா குரங்குகள்.

மேலும்

நான் எண்ணுவது ...


ஆரோக்கியத்தின் ஆரம்ப ஆசான்கள் 
ஜீரமும் பேதியும் .
கடந்து போனால் மீண்டும் தோன்றுவார் .
உள்வாங்கிப் போனால் ஆசி வழங்கி மறைவார்

மேலும்

மேலும்...
மேலே