நற்ச்செயல் நிறைக்கும் கைம் பெண்ணே - சி.எம்.ஜேசு ------------------------------...
நற்ச்செயல்
நிறைக்கும் கைம்
பெண்ணே - சி.எம்.ஜேசு
------------------------------
உன்னால் முடியுது
நிலவளவு நிமிர்ந்து
அந்நிலவையும்
புன்னகை முகமாக்க
உன்னால் முடியுது
உருவான சொந்தங்களை
சந்தங்களாக்கி இசைக்க
உன்னால் முடியுது
வேரறுந்த மரத்தையும்
பச்சை நிறமாக்கி வளர்த்தெடுக்க
உன்னால் முடியுது
உதவாத வாழ்வை உன் உழைப்பால் வளர்த்தெடுக்க
உன்னால் முடியுது
சிறியது பெரியதெனும்
பருவ பாகுபாடற்ற குடும்பத்தை உருவாக்க
உன்னால் முடியுது
சிந்தனைகளை செயல்களாக்கி அச்செயல்களை மகிழ்வாக்க
உன்னால் முடியுது
உன் விரல் வழுக்கிய வலயத்தை வெற்றிக் கோப்பைக்கான இடமாக்க
உன்னால் முடியுது
ஊர்சொல்லும் இழிச்சொல்லை இழுத்து
அம்பாக்கி குறிபார்க்க
உன்னால் முடியுது
தீங்குகள் நிறைக்கும் உலகில் தீயாகி நல் தாயாக
குடும்ப விளக்கேற்ற
இனி நீ விதவை இல்லை
உன் உழைப்பின் வெளிச்சத்தில் உலகுக்கே
வழிக்காட்ட வந்த தேவதை
தொடரும் ...