ஏதும் சொல்லி விடாதே

சகியே..

**

என் முடிவுகளை எல்லாம்

நீதான் ..

தீர்மானிப்பேன் என்கிறாய்

எப்போதுமே ..!

எதிர்மறையாய் பேசுகிறாய் ..

எப்போதுமே..!



**

ஆனால் ..

எப்போதுமே..

என் முடிவுகளை

ஏற்றுக் கொள்கிறாய் ..

தோற்று தோற்று

என்னை வெற்றி காண்கிறாய் !



**

எப்போதுமே..

உனது சொல்லுக்குதான்

நான்..

கட்டுப் பட வேண்டும்

என்றே சொல்கிறாய்



**

எப்போதுமே ..

உனக்கு கட்டுப்படுவதுபோல்

நான் பேசுவதை

தெரிந்தும் கூட

எப்படி ரசிக்கிறாய் ..

..



மாறி மாறி

தோற்பதால் நாம்

இருவரும்

வெற்றியல்லவா

பெறுகிறோம்

எப்போதுமே !

…………………………………………

உன் மௌனத்தால்

உயிர் பெறுகின்றன ..

நீ சொல்லாத வார்த்தைகள்..!

..
கொஞ்சம் பொறு ..

அவசரப்பட்டு

எதுவும் சொல்லி விடாதே ..

அவை பொய் என்பது

நம் இருவருக்குமே

தெரிந்துவிடக் கூடும் !

எழுதியவர் : கருணா (8-Aug-16, 11:38 am)
பார்வை : 109

மேலே