காதல் காதல்காதல்

காதல்..
இதை உச்சரிப்பது கூட தப்பு
என்று சொல்லப்பட்ட போதே
மூளையினுள் செலுத்தப்பட்டு விடுகிற
ரசாயன மாற்றம்..

பரிணாம தத்துவத்தில்
இனம் விருத்தியடைய இயற்கை
சொல்லிக் கொடுத்த பாலபாடம்
தக்க துணையோடு
உறவு தேடுவது பற்றியதுதானே

எஸ்ட்ரோஜன்களும்
டெஸ்டோஸ்டெரோன்களுமாக
பாலின ஹார்மோன்களின்
சித்து விளையாட்டில்
சிக்காமல் போவதற்கு
சித்தம் இல்லாதவர் எத்தனை பேர்..
காதலின் முதல் நிலையான
மோகம் / காமம் என்ற படியில்!

ஈர்ப்பு எனும்
அடுத்த நிலைக்கு தாவச் செய்யும்
டோபமைன் ஹார்மோன்கள்
எழுப்பும் விசைகள் அல்லவா..

அட்ரீனலின் தனது பங்கிற்கு
ரத்தத்தில் சூடேற்றி ஈர்ப்பினால்
உணவு , உறக்கம், ஓய்வு பாராது
இனிமை உணர்வுகளை வளர்த்து
இதயத் துடிப்பினை அதிகரிக்க

அதுவரையிலும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த
ஆக்சிடோசின்களும் வாஸோப்ரஸின்களும்
ஏங்க வைக்கும் உயிரை விடும்
காதல் எனும் உச்ச நிலைக்கு
கொண்டு செல்லும் நிலை கடத்திகள்
என்று ஆன பின்னே..

காதல் ..காதல்..காதல் ..தான்
காதல் ..போயின் ..சாதல் ..தான்.. !
அது முதல் காதலானாலும் சரி
முதல் மரியாதை காதலானாலும் சரி!

எழுதியவர் : கருணா (8-Aug-16, 9:58 am)
பார்வை : 104

மேலே