எப்போதும்
தூரத்தில் ..
புலிகளின் உறுமல்கள்
சிங்கங்களின் கர்ஜனைகள்
மேலே.. ..
கழுகுகளின் வட்டமடிப்பு
சுட்டெரிக்கும் வெயில்
சற்று நேரத்திற்கெல்லாம்
நிசப்தம் கூடிய அமைதி
கரு முகில்கள் ..
இளம் தூறலாய் மழை..
குளிர்ந்த காற்று ..
அப்போதும் ..
இப்போதும்..
எப்போதும் ..
கவலையின்றி சிரிக்கும்
மலைச்செடியின் மலர்கள்..
பசுந்தென்றல் வீசும் மரங்கள்..
இன்னிசை ரீங்காரம் எழுப்பியபடி
தேனை சேகரிக்கும் தேனீக்கள் ..
யோகத்தில் ஆழ்ந்ததாய்
பிரமிக்க வைக்கும் மலை ..
இவைகளின் நடுவே ..
பாடம் பயில்பவனாய்
மௌனமாய் ..நானும் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
