கற்றுக்கொள்வேன்

“அடையாள எண் 1.2.34 அவர்களே ..
நமது ..
தலைவருக்கான
பிறந்த நாள் விழாவில்
..
ஒரு மெல்லிய
இசைப் பின்னணியில்
நீல நிற மங்கிய வெளிச்சத்தில்
உங்களுக்கான மேடையில் ..
..
நீங்கள் அவரை வாழ்த்தி
கவிதை படிக்க அனுமதி அளித்துள்ளார் ”
என்று ..
லேசர் ஒளிக்கற்றை தகவல்
லேசர் தகவல் கடத்தும் குழாய் மூலமாக
தகவல் வர..
..
இது என்ன விபரீதம்
நான் கவிஞன் இல்லையே
எப்படி மேடையேறுவேன்
என்ன எழுதி வாசிப்பேன்..
அதிலும் தலைவரைப் பற்றி
எழுத என்ன இருக்கிறது..

என்று..

எனக்குள்..முனகிய
இரண்டு நிமிடங்களில்
அடுத்த தகவல் வருகிறது ..

“வருந்துகிறோம்..
நீங்கள் முனகியது
தலைவருக்கு தெரிந்து
உத்தரவை மாற்றியுள்ளார்..
உங்கள் நண்பர்
அடையாள எண்1.2.35 க்கு !”

பி.கு:
நாளை காலையில் உங்களுக்கு
மரண தண்டனை..
இறக்கும் முறை : உங்கள் அஞ்சல்
பெட்டியில் உள்ள திரவம் அருந்தவும்

“இல்லை..நான் கவிதை எழுதுவேன் ..
இன்றிரவுக்குள் கற்றுக்கொள்வேன்”
என்ற எனது அலறல்
அந்தப் பெருவெளியில் கரைகிறது
யாரையும் சென்றடையாமல் !

எழுதியவர் : கருணா (8-Aug-16, 11:35 am)
பார்வை : 647

மேலே