இராசேந்திரன் - சுயவிவரம்
(Profile)


தமிழ் பித்தன்
இயற்பெயர் | : இராசேந்திரன் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 14-Jun-1977 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 25-Aug-2015 |
பார்த்தவர்கள் | : 3855 |
புள்ளி | : 1156 |
சூழ்நிலை காரணமாக எனது பள்ளிப் படிப்பு, பாதியிலேயே நின்று விட்டாலும் எனக்குள்ளிருக்கும் தமிழார்வம் மற்றும் பல வருடங்களுக்கு முன் எனக்கு, தமிழ் கற்றுத்தந்த தமிழாசிரியர் திரு.கோவிந்தராசன் அவர்கள், தமிழாசிரியை தெய்வத்திரு, நாகலட்சுமி ஆகியோர்களாலேயே இவ்வளவு தூரம் எழுதும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன். மெத்தப் படித்தவர்களின் கவிதைகள் மத்தியில் நானும் தெரிகிறேன் என்பதற்குக் காரணமும் இவைதான். உயிரும் உள்ளமும் தமிழ் மணமாய் நிரம்பி இருக்கிறது. வெள்ளந்தியான விவசாய கிராமியத்தவன் என்றாலும் தமிழை ஆழமாகப் புரிந்து கொள்ளவும், இரசிக்கவும், கோர்வையாகவும் எழுதத் தெரியும் . நல்ல கவிதை, நல்ல கவிஞர் என்று பரிசு வாங்கும்வரை நான் எழுதுபவை எல்லாம் ”படைப்புகள்” என்றும் அதுவரை என்னை ”படைப்பாளி” என்றும் சொல்லிக் கொள்வதையே அதிகம் விரும்புபவன்
எழுத்து கவிதை போட்டி : வெற்றி பெற்ற படைப்பு
(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)
விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )
வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்
காதலர்களின்
வாக்குவாதத்தில்
வெடித்து சிதறுகின்றன
அன்பென பரிமாறிய
முத்தங்களின் எச்சங்கள் ,,,,,!
ஆதாரம்
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி
உயிரே...
உன்னை காண நித்தம்
வருகிறேன் உன்னைத்தேடி...
நான் பார்க்கும் தூரத்தில்
நீ இருந்தும்...
உன்னை அருகில் பார்க்க
என் இதயத்திற்கு ஆசை...
தினம் உன்னை நான் தொடர்வதால்
நான் காமுகன் அல்ல...
காதலை சொல்ல
துடிப்பவன் உன்னிடம்...
நீ இல்லாமல் நான் எனக்குள்
கட்டிய காதல் கோட்டை...
உன் நினைவுகளை மட்டுமே
பத்திரப்படுத்திருக்கிறேன்...
உன் இதழ்களில் இருந்து
வார்த்தைகள் வருவதில்லை...
நீ சுமந்து செல்லும் குடத்தில்
தண்ணீரும் சிந்துவதில்லை...
என்மீது காதல் இருந்தும் சொல்ல
மறுக்குதடி உன் இதழ்கள் மட்டும்...
உன் விழிகள் அல்ல...
எனக்குள் நீ இருப்பதை
அறி
எழுங்கதிர் இறங்கி வந்தே
----எழிலுடன் நிலத்தில் பாய
விழும்பனித் துளியை மந்தி
-----வியப்புடன் சாய்ந்து நோக்கத்
தொழுஞ்சிற கெடுத்துத் தும்பி
----தோழமை கொண்டே ஆட
உழுநிலம் வணங்கி வந்தே
-----ஓட்டினர் உழவர் ஏரை
.
.
(கொடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் படி பாட்டியற்றல்.)
விளம், மா, விளம், மா, விளம், காய் வரிசை, முதல் மற்றும் ஐந்தாம் சீர் மோனை )
வாடியே பயிர்கள் வருத்தமோ டழவே
--------வான்துளி மண்ணிறங்கித்
தேடியே பயிர்க்கால் பாய்ந்திடத் துளிர்க்கும்
-----------தினம்தினம் வயலதிலே
ஓடியே வரும்பாற் கீரிகள் முயல்கள்
-----------உறங்கிட நிழல்தேடி
நாடியே வந்து பெண்குயில் பாட
----------- நடமிடு வாய்மயிலே..!
.
..
கீரிகளில் ஒருவகை பாற்கீரி ( பால் கீரி ) சிறிது வெண்மை கலந்திருக்கும்
அன்புத் தோழமைகளே...
மகாகவி ஈரோடு தமிழன்பன் 84 ஆம் பிறந்தநாள் விழா மற்றும் " ஈரோடு தமிழன்பன் ஆயிரம் " நூல் வெளியீடு..... மற்றும் விருதளிப்பு
நாள் 12.11.2016
இடம் : முத்தமிழ்ப்பேரவை , திருவாவடுதுரை இராஜரத்தினம் கலையரங்கம் ,
இராஜா அண்ணாமலை புரம்
( எம்.ஜி.ஆர்_ ஜானகி கல்லூரி எதிரில்)
கமல்காளிதாஸ் ( வடிவமைப்பாளர்)
Dr. கோபி ( யாழ் அரங்கம்)
வள்ளிமுத்து ( திருக்குறள் பரப்பு)
கே.ஆர் இராசேந்திரன் (வேளாண்மை மற்றும் அதுசார்ந்த கவிதைகள்)
இளவமுதன்( காட்சி வழி ஊடகம்)
ராஜா சுந்தர்ராஜன் ( விமர்சனம்)
எனக்கு இருப்பிடம் எதுவும்
தேவையில்லை.
இரசித்துச் சாப்பிட
தனியுணவு தேவையில்லை
கால் நிற்கும் இடம்தான்
என் கூடாரம்..
காய்கனிகள் மட்டும் என்
நாவூறும் உணவாகும்...
கட்டுக்காகிதம் தேவையில்லை
காற்றில் நான் கவியெழுத
கடல் அலைகள் சந்தமிடும்...
வழிந்தோடும் ஓடை நீரோசை
தவிலிசையாய் கலந்தொலிக்கும்
வண்டரித்த மூங்கிலோசை
புல்லாங்குழலிசையாய்
கவிதையின் ஊடாக
கானகத்தை ஊடுருவும்...
தொங்கும் விழுதுகளே
தோரணமாய் எனக்கிருக்க
தேவையில்லை
முகத்துதி பாடும்
பொல்லாதவர்களின்
வரவேற்பு..
பட்டாடை தேவையில்லை
பணமுடிப்பும் தேவையில்லை
இடுப்பொட்டி இருந்திடவே
அரைக்கச்சை அதுபோதும்
அதுவும் இல்லைய
இனிநாளும் புதிதாக இசைபாடும் குயிலாக
***இனியேனும் மனம்மாறுவேன் !
தனியாக இருந்தாலும் தடுமாறித் தவியாமல்
***தமிழ்ச்சோலை தனில்கூடுவேன் !
கனிவோடு புகழ்கூறி கணநாதன் அருள்நாடி
***கவியோடு தினம்வாழுவேன் !
நுனிநாவில் கலைவாணி நொடியேனும் நடமாட
***நுதிபாடி ஜதிகூறுவேன் !!
பெங்களூரில் அப்பாவி தமிழ் மாணவனை தாக்கிய கன்னட வாலிபரின் பெயர், மற்றும் தொலைபேசி என் இது, முடிந்தவரை இதை பகிரவும்.
Mobile number : +919150144349
Yuva Karnataka
+91 96860 28888
No 2/B JP Road Girinagar 1st Phase Bangalore
560085 Bangalore
அன்புத் தோழமைகளே...
உங்களுக்கு நன்றி சொல்லும் ஒவ்வொரு தருணத்திலும் முகம் மகிழ்கிறேன். நேற்றோடு நம் “எழுத்து” தளம் நுழைந்து ஒரு வருடங்கள் ஓடிவிட்டது. எங்கோ ஒரு கிராமிய மூலையில் இருந்த நான் முதன் முதலாக எழுதியது இந்த தளத்தில்தான். இது என் தாய்வீடு.
முதன் முதலாக இந்த தளம் நுழைந்த நேரத்தை நெஞ்சில் நினைத்துப் பார்க்கிறேன். எங்கோ ஒரு மூலையில் களிமண்ணாய் இருந்த என்னை உங்கள் கருத்துகளில் செப்பனிட்டு இந்த கிராமிய களிமண்ணுக்கு உருவம் கொடுத்து உயர்த்தி இருக்கிறீர்கள். இதற்கு வெறும் ”நன்றி"என்ற மூன்றெழுத்து சொல் போதாது. இன்னும் அதற்கு இணையான வார்த்தைகளை தேடிக் கொண்டிருக்கிறேன்.ஒவ்வொருவருக்கும் தனித் தனியான என் நன்றிகளை இதன் மூலம் பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
ஆரம்பத்தில் நான் எழுதியவைகளையும், இப்போது நான் எழுதுபவைகளையும் பார்க்கிறேன். எனக்குள் பெரும் வித்தியாசத்தை காண்கிறேன்.இதற்கு முழுக்காரணம் நம் தளப் பெரியோர்களின் வழிகாட்டலும், மற்ற சகோதர சகோதரிகளின் கருத்து உற்சாகமும்தான். இந்த தளம்தான் எனக்கு எழுத்து அரங்கேற்ற மேடையானது. பார்வையாளர்களாய் நீங்கள்தான் எனக்கு கருத்து எனும் கைதட்டல்கள் கொடுத்து என்னை உயர்த்தினீர்கள், உயர்த்தி வருகிறீர்கள். நம் தளத்தில் எழுதுவதற்கு போட்டி இருந்தாலும், பொறாமை இல்லை. அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, அம்மா, அய்யா என்றுதான் எல்லோரையும் அழைக்கத் தோன்றுகிறது. காரணம் ஒரு குடும்ப உறுப்பினர்கள் தன் மகனுக்கு, தன் சகோதரனுக்கு என்ன உற்சாகம் கொடுப்பார்களோ அதைவிட 100 மடங்கு உற்சாகத்தை தந்து என்னை உயர்த்தி வருகிறீர்கள். அதற்கு உங்களுக்கும்,எனக்கு எழுத மேடை தந்த நம் தளத்துக்கும் எத்தனை நன்றிகள் சொன்னாலும் போதாது.
உங்கள் கருத்துகளில் என்னை செதுக்கி செதுக்கி இப்போது ஓரளவு தேறிவிட்டேன் என்றே நினைக்கிறேன். ஒரு காலத்தில் சாதாரண கவிதை என்பதே எனக்கு அசாதாராணமாக தெரிந்தது. இப்போது இலக்கணக் கவிதைகளை இனம் கண்டுகொண்டு எழுத முடிகிறது. இதற்காக திரு கன்னியப்பன் அய்யாவுக்கும், வெண்பா சாரலர் என்று அன்போடு அழைக்கும் சங்கரன் அய்யாவுக்கும் இந்த ஏகலைவனின் பணிவான வணக்கங்கள்.
கதிரவன் பெருமை-உழவின் மகிமை, உழவனதிகாரம், சுந்தரக்கோதை, தரைமீது கோலமயில், போன்ற வெண்பாக்களையும் எழுதும் அளவுக்கு என்னை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்.
திருக்குறளை எடுத்து உழவனதிகாரம் படைத்த நான் உங்களின் உற்சாகத்தால் புதிய முயற்சியாக இராமாயணத்தை “இராமர் நடந்த மருத நிலப்பாதை” எனும் தலைப்பில் 20 வெண்பாக்களாக படைக்க முயற்சியையும் செய்திருக்கிறேன்.
எனக்குத் தெரிந்த விவசாயம் மற்றும் கிராமியம் கலந்து நான் எழுதும் படைப்புகளுக்கு வாழ்த்து தந்த உற்சாகத்திலும், பலர் எழுதும் கவிதைகளை வாசித்து வாசித்தும் என்னை நானே மெருகேற்றிக் கொண்டேன்
முதன் முதலாக ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட நம் “எழுத்து” தளம் நடத்திய”மீண்டும் மீண்டும்” எனும் கவிதைப் போட்டியில் தளத் தோழர்களோடும், தமிழறிஞர்களோடு நானும் பங்குபெற்றேன். பள்ளிப் படிப்பை கூடபாதியிலேயே விட்டு வந்த கிராமியத்தவன் நானும் தமிழறிஞர்களோடு பரிசுக்குரியவனாக தேர்ந்தெடுக்கப் பட்டேன். அதற்கும் காரணம் நீங்கள்தான்.முதன் முதலில் நான் பெற்ற பரிசும் இதுவே அதைத் தொடர்ந்து வளர்ச்சிகளில் ஒவ்வொரு படியாக ஏறினேன். இல்லை நீங்கள்தான் ஏற்றி வைத்தீர்கள்.
கிராமம் விட்டு வெளியே எங்கும் செல்லாத என்னையும் என் எழுத்து சென்னை வரை கொண்டு சேர்த்தது.
தீவுத்திடலில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் திரைப்படக் கவிஞர்கள். திரு அண்ணாமலை, திரு பிரியன் அவர்களின் கையால் என் கவிதை ஒன்று அரங்கேறிய நூலை பெற்றுக் கொண்ட சந்தோசம் வாழ்வில் மிகப் பெரிய தருணம்.அந்த மேடையிலும் நான் எழுதிய கவிதையின் வரிகளை மேற்கோள் காட்டி சிறப்புரையாளர் சொன்ன போது என்னை உயர்த்திவிட்ட உங்களை மட்டுமே நினைத்து நெகிழ்ந்தேன்.
நண்பர்கள் (131)

ஜெகன் ரா தி
மதுரை

இராகுல் கலையரசன்
பட்டுக்கோட்டை

பச்சைப்பனிமலர்
திருகோணமலை

பிரபாவதி
ஈரோடு
