இராசேந்திரன்- கருத்துகள்


சகோதரி நீங்கள் ஆரம்பத்திலேயே பிழை பொறுக்கவும் என்று கூறியிருக்கும் உங்களிடம் எங்கு பிழையிருக்கிறது என சுட்டிக்காட்டச் சொன்னால் அதற்கும் இரண்டு மூன்று கருத்துகளை பதிவீர்கள். பிழையில்லாமல் எழுத நான் சிவன் இல்லை என்று ஒரு உயர்தொனியோடு சொல்லியிருக்கும் உங்களிடம் பிழை இதுதான் திருத்துங்கள் என்று நான் அதை மறுபடியும் சொல்வது வீண்.

பிழை இருக்கிறது என்று தெரிந்தும், பிழை பொறுக்கவும் என்று சொன்ன நீங்கள் பிழைகளைச் சரிசெய்யாமல் இருப்பதைப் பார்த்தால் எதனையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாத தலைமுறைதானோ என நினைக்கத் தோன்றுகிறது சகோதரி, பிழையோடு எழுதியிருக்கும் நீங்களே கருத்துகளை இப்படி வீசுகிறீர்களே பிழைகளின்றி எழுதிய பிறரின் மன நிலை எப்படியிருக்கும்.?

பிழை திருத்தியிருக்கலாம் என்றுதானே சொன்னேன். நான் சொன்ன மற்றவை நடுவர்களுக்குத்தான். பிழையிருக்கிறது என்று தெரிந்தும் வாழ்த்தச் சொல்லுகிறீர்கள்.கடைசிவரை பிழையோடு நல்லா இரு என்று வாழ்த்த உங்களைப் போன்றோர்களால்தான் முடியும்.. காரணம் தமிழ் உங்கள் உயிர் இல்லை.

தமிழ் என் உயிரும் இல்லை உலகமும் இல்லை இரண்டுக்கும் அழிவு உண்டு என்கீறீர்களே அது எங்களைப் போன்றோர்களின் உயிர் என்பதாலா சகோதரி ?. தாய் அழிகிறாள் என்பதை வார்த்தையில் சொல்லக்கூட விரும்பாத நீங்கள் அதை எழுத்துப்பிழைகளில் செய்திருக்கிறீர்கள். அப்படிச் செய்யவேண்டாம்.அதை சரிசெய்திருக்கலாம், பிழைகளை சரிசெய்யாமல் தாய் அழிவதை வார்த்தையில் சொல்லக்கூட விரும்பாத தமிழச்சி என்று சொல்வது வேதனைதான்.
.

சொல் வழக்காயினும் அதற்கும் உயிர், உணர்வுகள் இருக்கிறது சகோதரி..உங்களுக்கு அது பொழுதுபோக்கு. அதனால்தான் பாதிக்கவில்லை என்கிறீர்கள். எனக்கு அது உயிர், உலகம் எல்லாமே சகோதரி.. ஒரு எழுத்தில் பிழை என்றாலே தமிழன்னையை குற்றுயிராக்கிய நிலை. குற்றுயிராக்கியபின் கருத்தையும் சொல்லையும் பார்ப்பது குத்திக்குதறிய அன்னையை காயம் எங்கிருக்கிறது என்று பார்ப்பது போல்தான். சகோதரி. உங்களுக்கு தாய்மொழி இது என்றிருந்தால் இன்னும் சிரத்தை எடுத்திருக்கவேண்டுமே. அதற்குரிய மரியாதையை தந்திருக்க வேண்டுமே. மேலும் நான் உங்களைக் குற்றம் சொல்லவில்லையே சகோதரி. மிகப் பெரும் போட்டியொன்றில் தவறுக்குப் பரிசளித்த நடுவருக்குத்தான் என் கண்டனங்கள். தமிழ் இப்படித்தான் தமிழர்களால் அழிந்துகொண்டிருக்கிறது.

இதை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்த்துகள் சீதளாதேவி சகோதரி. எழுத்துப் பிழைகளை சரி செய்திருக்கலாம். பிழையான கவிதைக்கு பரிசு தந்து பாராட்டும் சேவையில் தமிழுக்கான ஒரு தளம்.. சகோதரி கீத்ஸ் அவர்களே. இதைத் தேர்வு செய்தது நீங்கள்தானா.. அல்லது ஒருதலைப் பட்சமாக தேர்வு செய்த நடுவர் யார் என்பதை தெரிந்துகொள்ளலாமா..?

விவசாயத்துக்கு வாருங்கள் தம்பி. வருங்காலம் உங்களைப் போன்றோர்களால் பசுமையில் பசியாறட்டும்.

மிக்க நன்றி அய்யா. நீங்கள் சொன்ன எண் வகை அதுவும் அறிவேன் அய்யா. அது அறிந்தால்தானே அய்யா ஒரு பாடல் திறம்பட இயற்ற முடியும். மேலும் இது நீங்கள் நினைத்திருப்பதைப் போல் ஓலைச் சுவடிக் காலத்துப் போட்டியல்ல அய்யா. யாப்பை செம்மைப் படுத்தும் பயிற்சி. அசைக்காக, தளைக்காக பழஞ்சொற்களை தேடியெடுத்து போடும் மெத்தப் படித்தவனும் அல்ல என்பதால் நான் காணும் காட்சிகள் .இயற்கையாகவே பாடலாக்குகிறேன். இயற்கையாக இருந்தால்தான் எங்களைப் போன்ற கடைக்கோடி மக்களின் மனதிலும் யாப்பு ஆசையை வளர்க்க முடியும் என்பது என் உறுதியான நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. இன்றைய முகனூலில் கவிஞர் என அடைமொழியிட்டு என்று தனக்குத்தானே திருநாமம் சூட்டிக்கொண்டு பொழுதுபோக்குக்காக தமிழை எழுதுபவர்களைப் போலல்லாது அதை உயிராக நினைத்து முயல்கிறேன்.

திரு கன்னியப்பன் அய்யா மற்றும் உங்களைப் போன்றோரின் ஏகலைவன் நான் அவ்வளவு எளிதில் சோடை போக மாட்டேன். உடும்புப் பிடி முயற்சி. நான் பிறரைப்போல் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் இதோ நான் இயற்றிய ஒரு தாழிசை இது யாப்பு பயில ஆசைப்படும் என் போன்ற கடைக்கோடி மாணவர்களுக்காக.

மோனை இயைபு எதுகையொடு முரணென
அளபெடை அந்தாதி இரட்டைத் தொடையுடன்
செந்தொடை கொண்டதோர் செம்மையே யாப்பு !

இதில் சீர்மோனை அமைவில் முதலடியில் ஒரூஉ மோனையும், இரண்டாம் அடியில் இணைமோனையும், மூன்றாம் அடியில் பொழிப்பு மோனையும் கொண்டு எழுதியிருக்கிறேன் அய்யா. இதில் நீங்கள் சொன்ன அந்த ”எண்” அடக்கம். ( இதே போல் எனது இன்னொரு அறுசீர்க் கழி நெடிலடி விருத்தமும் இதே நாளில் நம் தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்.அதையும் படித்து தாங்கள் நினைப்பதை சொன்னால் மகிழ்வேன்.)

நன்றி சகோதரி. உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்துகள்தான் என்னை உயரம் தொட வைத்திருக்கிறது.

நன்றி சகோதரி. வாழ்த்தில் வளர்கிறேன்.

தினமும் தளம் வருகிறேன். கருத்திட முடிவதில்லை. முழுதும் படித்து கருத்திடுவதே முறை என்பதால் படிக்க முடிவதில்லை. ஒரு மாதத்துக்கு முன் வந்த மழையில் கிணற்று நீர் மட்டம் ஏறி விட்டது.விவசாயம் ஆரம்பமானதால் முழுதும் படிக்கமுடியவில்லை. மற்றபடி தினம் தளம் வருகிறேன்.

இது போதும் தோழரே. உங்கள் எல்லோர் மனங்களிலும் நிறைந்து, தளம் இணைந்த இந்த் ஒரு வருடத்துக்குள் இப்படி ஒரு விருதையும் பெற்றதே என் வானளாவிய உயரம்.இது போதும் தோழரே. நன்றி தோழரே.

வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா.. மரபுவழி யாப்புக்கு நீங்கள்தான் என் இரண்டாவது ஆசான். என் மீது அக்கறை கொண்ட உங்களுக்கு இல்லாத உரிமையா.. நீங்கள் கொட்டினாலும் அது மோதிரக் கை என்பதால் மகிழ்ச்சிதான் பெருகும். ஏனென்றால் யாப்பு பயின்று வரும் எனக்கு தங்களின் தனிப்பார்வை இருப்பதென்பதை உறுதிசெய்துகொள்ள இதைவிட எனக்கு என்ன வேண்டும்..?

சீர் மோனை என்பதில் புரிதலில் தவறு என நினைக்கிறேன் அய்யா. ஒவ்வோர் அடியிலும் முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனை பயின்று வரவேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அதன்படி எழுதியது அய்யா. இது பைந்தமிழ்ச் சோலை என்ற தளத்தில் பாட்டியற்றுக என்ற ஒரு பயிற்சி இருக்கிறது. அதில் சொல்லிய நிபந்தனைகளின்படி எழுதப் பட்டது

முதலடியில் முதல் சீர் வாடியே என்பதில் உள்ள ”வா” என்பதற்கு அந்த அடியில் உள்ள ஐந்தாம் சீர் வான்துளியில் உள்ள ”வா” என்பது மோனை இப்படியே.

தேடியே - தினம்தினம்
ஓடியே – உறங்கிட
நாடியே – நடமிடு

நன்றி அய்யா

நன்றி தோழரே. மரபுவழியிலும் சிறுசிறு முயற்சிகள். மரபுவழி யாப்பைக் கற்காமல் இருப்பது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. திரு கன்னியப்பன் அய்யா, திரு சங்கரன் அய்யா, சியாமளா அம்மா போன்றோர்களின் ஊக்கம், இப்போது இணைந்த மரபுத் தளம் என ஒவ்வொரு படியாக முயற்சிக்கிறேன்.

நன்றி தங்கையே. சிறப்பான விழா. அருமையான உபசரிப்பு. பலரை சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.

ஆகா...எதார்த்தமான ஆதாரம்.. .. சண்டையைக் கிளப்பி சந்தோசப்படும் நிகழ்ச்சி அதற்கு தக்க சான்றுதான் தம்பி...

ஒருநாள் வேண்டும்
நீ நானாக...

அன்று உணர்வாய் என்
இதயத்தின் வாசத்தை...

இடமாறு தோற்றப்பிழை இங்கே இதயமாறு தோற்றமாகிவிட்டது. அருமை தம்பி.( வெளி நாடு வாசம்.. தீபாவளிக்கு வந்தாயா. ஊரில் வந்து எவ்வளவு நாள் இருந்தாய்..ஊரில் இருந்த நாட்கள் இதயத்தை வருடி இருக்குமே.!)

வாழ்த்துக்கு நன்றி தம்பி.. உன்னை சந்திக்க எதிர்பார்த்தேன்.நீயேன் வரவில்லையோ.?

உங்களைப் போன்றோரின் ஆசிகளில் உயரம் தொடுகிறேன். இன்னும் தொடுவேன். நன்றி அய்யா. வாழ்த்தில் வளர்கிறேன்.

பலரது வாழ்வியல் பாதைகளை வலிகள்தான் அறிமுகப்படுத்துகிறது.

என் அன்னைத் தளமே..!
எத்தனையோ முறை
சச்சரவுகள் நமக்குள்..
.
எழ்த்துப் பிழைக்காக
எத்தனையோ முறை
வாக்குவாதங்கள்...

குடும்பம் என்றாகிவிட்டதால்
இவைகளுக்கு எப்போதும்
குறைச்சல் இல்லை..

இருந்தும் என்னை
ஒவ்வொரு உயரங்களையும்
எளிதாகவே தொட வைக்கிறாய்.

உன்னில் இணைந்த
இந்த ஓராண்டுக் காலத்தில்
நீயே என் உழுவயலானாய்
சொல் எனும் விதைகொண்டு
நான் விளைவிக்கும் கவிதையானாய்..
பாராட்டு மகசூலை
அள்ளித் தந்தாய்.....

கிணற்று நீர்மட்டம்
தாழும்போதெல்லாம்
அதை மறக்க
இங்கு வந்த எனக்கு
ஆறுதல் தரும் அரவணைப்பானாய்.

கிராமத்துக்குள் முடங்கிப் போன
என் சொல் விதைகளின்
வீரியத்தை எழுத்துவழி
பிறர்காண வைத்தாய்,,,

விவசாயக் களப்பணியையும்
அதுசார்ந்த என் தளப்பணியையும்
ஒருங்கே தாலாட்டிய
தனியன்னை நீயல்லவா...

என் கிராமிய வாசனையை
தலைநகருக்கும்... ஏன்
டல்லாஸ் என்ற வெளி நாட்டுக்கும்
அறிமுகப்படுத்திய
அற்புதம் நீயல்லவா,,,?

தளம் இணைந்ததென்னவோ
ஒரு வருடத்துக்கு முன்புதான்...
இருந்தும் நான் சாதித்துவிட்டேன்
ஒருயுக சிறப்புகளை....

தாழ்வு மனப்பான்மை போக்க
தோழர்கள் பலரைத் தந்து
அறவழி நடக்க
அரிய மனிதர்கள் பலரைத் தந்து
என்னை ஆற்றுப் படுத்த
தமிழறிஞர்கள் பலரைத் தந்து
அரவணைத்து அன்பு பாராட்ட
அன்னையர்கள் பலரைத் தந்து
தோள் மீது சுமந்த
அருந்தளமே...அன்னையே
நன்றி என்ற சொல் சிறிதே...
அதனால் நன்றியோடு வணங்குகிறேன்.

என்னைப் போல்
இன்னும் பலரையும்
உலகறியச் செய்யும்
உன்னதப் பணிகள் எப்போதும் தொடரட்டும்..
அதற்கு உதாரணமாக நானிருப்பதில்
எனக்குப் பெருமை..
என் அன்னைத் தளத்துக்கும் பெருமை.

என்றும் நன்றியோடு
நான். இல்லை இல்லை நாம்.
.


இராசேந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே