எனக்குள் நீ இருப்பதை அறிவாயா 555

உயிரே...

உன்னை காண நித்தம்
வருகிறேன் உன்னைத்தேடி...

நான் பார்க்கும் தூரத்தில்
நீ இருந்தும்...

உன்னை அருகில் பார்க்க
என் இதயத்திற்கு ஆசை...

தினம் உன்னை நான் தொடர்வதால்
நான் காமுகன் அல்ல...

காதலை சொல்ல
துடிப்பவன் உன்னிடம்...

நீ இல்லாமல் நான் எனக்குள்
கட்டிய காதல் கோட்டை...

உன் நினைவுகளை மட்டுமே
பத்திரப்படுத்திருக்கிறேன்...

உன் இதழ்களில் இருந்து
வார்த்தைகள் வருவதில்லை...

நீ சுமந்து செல்லும் குடத்தில்
தண்ணீரும் சிந்துவதில்லை...

என்மீது காதல் இருந்தும் சொல்ல
மறுக்குதடி உன் இதழ்கள் மட்டும்...

உன் விழிகள் அல்ல...

எனக்குள் நீ இருப்பதை
அறிந்தால்...

உன் விழிப்பார்வையை
என் விழிகளுக்கு அனுப்பிவிடு...

உனக்கு பின்னல் வரும்
உன் நிழலை மட்டும்...

ஏனடி அடிக்கடி திரும்பி
பார்க்கிறாய்...

ஒருநாள் வேண்டும்
நீ நானாக...

அன்று உணர்வாய் என்
இதயத்தின் வாசத்தை...

முழுமையாக
நீ உணர்வாய்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (20-Nov-16, 7:58 pm)
பார்வை : 1711

மேலே