காதல் கவிதை

நடைபினமாய் நட மாறும்
நடுநிலையைத் தந்தவனே
நந்தவனம் எரிந்த கதை
நந்த குமாரா நீ அறிவாயா,..?

உணர்வுகள் மறந்த உடலொன்று
உறக்கம் கொள்ளும் பகலையும்
உவா சுமந்த ஞாபகங்கள்
உறங்காமல் விழித்திருக்கும் இராவையும்
உணர்ந்தாயா....?

கட்டழகு கன்னிகை
கச்சிதமா கண்டு வெச்ச
கனா கணப்பில் வெந்து சாம்பலாய்
ககனம் புகுந்த கதை
கயவன் நீ அறிந்தாயா...?

மண வானில் குடையின்றி
மங்கையிவள் நினைவுத் தீயில் நனைய
மகக் குழை மேனி வெந்தெரிந்து
மனையறம் மரித்த நிஜம்
மள்ளன் நீ கேள்விப்பட்டாயா...?

இராகம் நிறைந்தவள்
இதயம் நின்று போன சேதி
இயவன் நீ அறிந்தாயா...?
இயன் மகள் இரங்கலில்
இரியல் தான் கொண்டாயா..?

முபாறக் பாத்திமா அஸ்க்கியா

எழுதியவர் : M.F.Askiya (21-Nov-16, 7:41 am)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 744

மேலே