வலிகள் -சகி
நான் நானாகவே
இருந்திருக்கவேண்டுமோ?
உன்காதல் வார்த்தைகளை
மெய்யென்று எண்ணி
என்வலிகளை மறந்தேன் ...
கடந்த என்வாழ்வின்
வலிகளைவிட நீ கொடுக்கும்
வலிகள் மிகவும் வலியானவை....
தினம் தினம் மலரும்
மலர்கள் உதிர்ந்துவிடும் ....
மலரைப்போலவே உன்
சந்தேக வார்த்தைகளால்
தினம் தினம் கருகி
சாம்பலாகிறேன் .....
என்விழிகளில் வழியும்
கண்ணீர்த்துளிகள் நிமிடம்
நிமிடம் உன் வார்த்தையின்
வலிகள் மட்டுமே ....
தொடர்கிறேன் என்
வலிகளுடன் என் வாழ்க்கையை ......