அன்புத் தோழமைகளே... தளம் இணைந்த சிறுகால இடைவெளியில் உங்களால்...
அன்புத் தோழமைகளே...
தளம் இணைந்த சிறுகால இடைவெளியில் உங்களால் எத்தனையோ முன்னேற்றம். உங்கள் ஊக்கத்தாலும் உற்சாகத்தாலும் பலவற்றை பெற்று உயர்கிறேன். நான் பெற்ற முதலாவதும் முக்கியமான விருதுமான மகாகவி தமிழன்பன் விருது - 2016 இந்த ஆண்டு. வேளாண்மை மற்றும் தமிழ் சம்பந்தமான படைப்புகளுக்கு எனக்கு வழங்கப்பட்டதை பெருமையாக உணர்கிறேன்.ஒரு துளிக்கவிதை புதுச்சேரி சார்பாக பாரம்பரியம் மிக்க சென்னை முத்தமிழ் மன்றத்தில்12-11-2016 அன்று நடைபெற்ற மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது 2016 விழாவில் வேளாண்மை மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என்ற பிரிவில் பல்துறை அறிஞர்களோடு நானும் பெற்றுக்கொண்ட சான்றிதழ், தங்கவர்ணத்தில் அமைந்த விருதுப் பட்டயம் மற்றும் போர்த்தப்பட்ட பருத்தியாடைத் தோள் துண்டு. இந்த விருது எனக்குக் கிடைத்தது தோழமைகள் உங்கள் உற்சாகத்தால்தான். அறிஞர் பெருமக்கள் உங்கள் ஆசிகளால்தான். இதை எழுத்து தளத்துக்கும், எழுத்தின் ஒவ்வொரு தோழமைகளுக்கும் காணிக்கையாக்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. நான் வளர்ந்தது, வளர்வது எல்லாமே உங்கள் வாழ்த்துகளாலும் ஆசிகளாலும் மட்டுமே. உங்கள் ஒவ்வொருவருக்கும் இருகை கூப்பி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.