மன்சூர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மன்சூர்
இடம்:  பாண்டிச்சேரி
பிறந்த தேதி :  09-Oct-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-May-2017
பார்த்தவர்கள்:  921
புள்ளி:  59

என்னைப் பற்றி...

தமிழில் ஆர்வம் கொண்டவன், பாரதியின் ரசிகன். இணையதள இயக்குனர்.

முஸ்லிமானாலும் தமிழன் என்று பெருமை கொள்கிறேன்.

காதலிக்க யாருமில்லை!
இதில் பிரிவு இல்லை, வலி இல்லை தமிழை காதலிப்பதால்!

என் படைப்புகள்
மன்சூர் செய்திகள்
மன்சூர் - எண்ணம் (public)
29-Nov-2019 4:56 pm

ஒரு விடயத்தில் முடிவெடுக்க பலபேருடன் சேர்ந்து ஆலோசிப்பது தவறல்ல, ஆனால் முடிவெடுப்பதற்காகவே ஒருவனை பலரும் சேர்ந்து தேர்ந்தெடுப்பது மிகப்பெரிய முட்டாள் தனம்.

  -மன்சூர் 


ஆதி காலத்தில் யாருக்கு மிக பலம் அல்லது வசதி இருந்ததோ அவர்கள் அச்சுறுத்தலையும் பயத்தையும் காட்டி மற்றவர்களை அடிமையாக வைத்திருந்தனர்.
காலம் மாற மாற அவர்களின் யுக்தியும் மாறின.

 இன்று நாம் யார்க்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பதை நாமே தேர்ந்தெடுக்கும் தன்மையை உரிமை என்ற பெயரால் உருவாக்கி விட்டனர்.  

மன்னர் ஆட்சியை விட மக்கள் ஆட்சியே சிறந்தது என ஒருவனை தேர்ந்தெடுப்பதும், மக்களால் ஆட்சியையே மாற்றி அமைக்க முடியும் என்றெல்லாம் நாம் பெருமைப்பட்டாலும் எப்போதும் நம்மை ஒருவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றுதான் நினைக்கிறார்.


மேலும்

'டெலிகிராம் ஆப்'-ல் தினமலர் செய்திகள் சென்னை: தினமலர் இணையதள செய்திகளை இனிமேல் 'டெலிகிராம் ஆப்' மூலமும் படிக்கலாம். தினமலர் இணையதளத்தில் வரும், புதிய செய்திகள், முக்கிய செய்திகள், விரைவு செய்திகள் (பிளாஷ் நியூஸ்), சினிமா, கோயில் செய்திகளை உடனுக்குடன் மொபைலில் 'டெலிகிராம் ஆப்' மூலம் படிக்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிர்ந்தும் கொள்ளலாம். 'டெலிகிராம் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து, தினமலர் சேனலை சப்ஸ்கிரைப்(subscribe) செய்யுங்கள். #Dinamalardaily #Dinamalartelegram t.me/dinamalardaily 30-Nov-2019 3:23 pm
மன்சூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2018 10:39 pm

குழந்தாய் நீ குழந்தாய்,
நீ சிரிக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய் நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..

உன்னோடு இருந்த, உன்னோடு இறந்த,
எல்லோருக்கும் அழுகிறேனே
கண்ணீர் மழுக..
வரம் ஒன்று வேண்டும், நீ உயிரோடு இருக்க,
யாரேனும் வர வேண்டும் இந்த போரை தடுக்க..

இது விதில்லையே, வெறும் சதியானதே,
எங்கேயும், எப்போதும், மழையாகுதே,
வெடி மழையாகுதே..

குழந்தாய், நீ குழந்தாய்,
நான் இருக்கும்போதே இறந்தாய்..
குழந்தாய், நீ குழந்தாய், இதை
காணத்தானா பிறந்தாய்...

மேலும்

கண்ணீர் சிந்தப்பட்டும் மாற்றங்கள் காணாத போர்க்களங்கள் தான் யுகத்தில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Mar-2018 1:40 am
மன்சூர் - மன்சூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Nov-2017 9:58 am

அனைத்து பெண்களும் அழகுதான் அவரவர் பார்வைக்கு..

என்றாலும்...

உனது பளபளப்பான சருமம்.. அதிலே சந்தன வாசம்..
உனது இமைக்கண் பார்வை...
இழகும் என் மனம்..

உன் வழவழப்பான கால்களில் வழுக்குத்தேடி என் உயிர்!
உனது கலகலப்பான புன்னகையில் மறக்குதடி என் கவி!

அனைத்து பெண்களும் பொறாமை கொல்வார்கள் உன் அழகை கண்டு!
அனைத்து ஆண்களும் அடிமையாவர்கள் உன் அழகை கண்டு!
.......................
கவி பாட அழைத்தாய் என்னை
மனமில்லாமல் வந்தேன். அவளை பார்த்த பின் செல்ல மனமில்லாமல் நிற்கிறேன்..
தந்து விடு என் கவிதையை (அவளை)
:(

மேலும்

நன்றி தோழா 18-Nov-2017 2:24 pm
அருமை நட்பே... 18-Nov-2017 1:37 pm
மன்சூர் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2017 9:58 am

அனைத்து பெண்களும் அழகுதான் அவரவர் பார்வைக்கு..

என்றாலும்...

உனது பளபளப்பான சருமம்.. அதிலே சந்தன வாசம்..
உனது இமைக்கண் பார்வை...
இழகும் என் மனம்..

உன் வழவழப்பான கால்களில் வழுக்குத்தேடி என் உயிர்!
உனது கலகலப்பான புன்னகையில் மறக்குதடி என் கவி!

அனைத்து பெண்களும் பொறாமை கொல்வார்கள் உன் அழகை கண்டு!
அனைத்து ஆண்களும் அடிமையாவர்கள் உன் அழகை கண்டு!
.......................
கவி பாட அழைத்தாய் என்னை
மனமில்லாமல் வந்தேன். அவளை பார்த்த பின் செல்ல மனமில்லாமல் நிற்கிறேன்..
தந்து விடு என் கவிதையை (அவளை)
:(

மேலும்

நன்றி தோழா 18-Nov-2017 2:24 pm
அருமை நட்பே... 18-Nov-2017 1:37 pm
மன்சூர் - மன்சூர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Sep-2017 9:17 pm

திருமணம் ஆனதிற்கு பிறகு மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வேண்டுமா?

யாரேனும் கொண்டாடுபவர்கள் இருந்தால் எத்தனை வருடங்கள் கொண்டாடினீர்?

மனைவியின் பிறந்தநாளை கொண்டாட வில்லையெனில் தவறாகுமோ?

மேலும்

மனைவிக்கு பிறந்த நாள் கொண்டாடு என்று உலகமே சொல்லிக் கொடுக்கிறது உண்மைதான் தோழரே! 23-Sep-2017 8:30 am
சரியாக சொன்னீர்கள்.. Nanri 23-Sep-2017 8:24 am
ஏன்? தாய் தங்கைக்கும் கொண்டாடலாமே! அவர்களும் செண்டிமெண்ட் உள்ள பெண்கள்தானே! தமையன் தனக்காக கொண்டாடினால் தங்கை ஆனந்தக்கண்ணீர் விட மாட்டாளா? தாய்க்காக மகன் கொண்டாடினால் தாய் பெருமிதம் அடைய மாட்டாளா? வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் கேட்கலாம் தாயிடம்! வாழ்த்து தெரிவித்து விட்டு ஆசீர்வாதம் செய்யலாம் தங்கையை! இன்றைய வாட்ஸாப் யுகத்தில் எல்லா உறவுகளுக்கும் அவரவர் பிறந்தநாள் அன்று வாழ்த்து தெரிவிப்பது சம்பிரதாயமாகி விட்டது! அலுவலக ஊழியர்களுக்கும் வாட்ஸாப் குரூப் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறார்கள்! இவையெல்லாம் வரவேற்கத் தக்க மாற்றங்களே! 22-Sep-2017 11:40 pm
ஆண்களின் பிறந்த நாளை மனைவிகள் என்றும் மறந்ததில்லை! உண்மைதான் கீதா! கேசரி என்ற வார்த்தையைக் கேட்டாலே மகிழ்ச்சியாக இருக்கிறது! 22-Sep-2017 11:29 pm
மன்சூர் - எண்ணம் (public)
22-Sep-2017 8:44 am
மன்சூர் - ஸ்ரீ தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2017 4:39 pm

கவிகளாயிரம் தொடுப்போம் - உந்தன் பாத தரிசனத்திற்கு பிறகே அதையும் படைப்போம்...

உரிமைக்குரல் கொடுப்போம்- குரல் வளையை நெரிக்கின்ற நியாயமற்ற கோட்பாடுகளை உடைப்போம்...

வேர்வைதுளிகளை விதைப்போம்- துரோகத்தால் விழுகின்ற போதெல்லாம் எழுகிற திடம் கேட்போம்...

சாதிப்பேய்களை ஒழிப்போம்- இங்கு சாகா வரம் பெற்றவன் யாருமில்லையென்று உரைப்போம்...

பேனாநுனியில் வசிப்போம்- சீர்கெட்ட வாதிகளின் முகத்திரையை மறக்காமல் கிழிப்போம்...

பெண்ணியத்தை மதிப்போம்- கற்பு ஆணுக்குமுண்டென்று முட்டாள் அறிவிலும் புதைப்போம்...

பொய்மையை துறப்போம்- உரிமையே தமிழனின் வீரமென அந்நியர்களுக்கு பறையடிப்போம்...

ராமன்களை மட்டுமே

மேலும்

நன்றி!!! 23-Sep-2017 7:34 pm
கவிதையின் தலைப்பு புதுமையாக, நன்றாக இருக்கிறது! 21-Sep-2017 11:31 pm
மன்சூர் - மன்சூர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Aug-2017 10:21 pm

நல்லவர் யாரோ?
தீயவர் யாரோ?
அறியாத சனங்கள் நாங்கள்.

நல்லவனை வாழ விட்டவன் யாரோ?
தீயவனை வளர்த்து விட்டவன் யாரோ?
வளர முடியாமல் நாங்கள்.

இதில் உன்னைத்தவிர மக்களுக்காக வாழ்ந்தவன் யாரோ!

மேலும்

நன்றி 21-Sep-2017 6:52 am
ஈடுயிணையில்லா தலைமை நீதியின் கருவறையில் முளைத்து நீதியோடு கல்லறை சென்ற மாமனிதர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Aug-2017 10:47 pm
மன்சூர் - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Sep-2017 12:33 pm

எண்ணம் காணொளி போட்டி

தோழர்களுக்கு வணக்கம்!
எழுத்து நடத்தும் எண்ணம் காணொளி போட்டி
தொடங்கும் நாள் - 18-09-2017
முடியும் நாள் - 27-09-2017


தோழர்களின் விருப்பப்படி போட்டி இறுதி நாள் 27 வரை நீடிக்கப் பட்டுள்ளது.

விதிமுறைகள்:
  • சமர்ப்பிக்கபடும் காணொளி உங்களது சொந்த காணொளியாக மட்டுமே இருத்தல் வேண்டும்.
  • காணொளி ஏதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். கவிதை மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்பது இல்லை. தாங்கள் எடுத்த குறும்படம். நண்பர்களுடன் மகிழ்ந்த காட்சிகள், செல்ல பிராணிகளின் சேட்டை என்று எதையும் தாங்கள் சமர்ப்பிக்கலாம் .
  • ஒரு நிமிட காணொளி மட்டுமே சமர்ப்பித்தல் வேண்டும்.
  • சிறந்த காணொளி ஒன்றிற்கு ஒரு சிறப்பு பரிசு வழங்கப்படும்.

காணொளி சமர்ப்பிக்க:
  • எழுத்து எண்ணத்தில் உங்களது காணொளியை சமர்ப்பிக்க நீங்கள் உங்களது youtube பக்கத்திற்கு சென்று share பட்டன் கிளிக் செய்யவும்.
  • பிறகு Embed என்பதை கிளிக் செய்து. உங்கள் காணொளி கோடை காபி செய்யவும்.
  • அதன் பின், எண்ணம் பகுதிக்கு வந்து video icon கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் காபி செய்த கோடை paste செய்யவும்.
  • Add வீடியோ என்பதை கிளிக் செய்தால் உங்கள் காணொளி எண்ணத்தில் சேர்ந்துவிடும்.
  • உங்களது கானொலிக்கேற்ப தலைப்பு கொடுத்து எண்ணத்தை அனைவரும் பார்க்கும் படி பதிவு செய்யவும்.

இப்படிக்கு,
எழுத்து குழுமம்

மேலும்

நிச்சயம் நீட்டிக்கப்படும் 21-Sep-2017 3:42 pm
போட்டி நடைபெறும் காலத்தையும் கொஞ்சம் நீடிக்கலாமே! இதுவரை போட்டியின் விதிமுறைகளை தழுவி வெறுமனே மூன்று காணொளிகள் மட்டுமே பதிவாகி இருக்கிறது. 21-Sep-2017 11:40 am
மன்னிக்கவும் தோழரே! கண்டிப்பாக இன்று பிழை திருத்தும் செய்து அனைவரும் பதிவிடும் பாடி மாற்றி அறிவிக்கப்படும். 21-Sep-2017 10:53 am
மாற்றத்தை தான் எதிர்பார்க்கிறோம் ஆனால் எங்கும் எப்போதும் ஏமாற்றம் தான் அடைகிறோம். கடந்த காலத்தை நினைக்கும் போது நிகழ்காலத்தில் அவைகளை மீட்க முடியாது என்பதே உண்மை. இனி இருக்கின்ற சூழ்நிலையில் ஓர் ஆரோக்கியமான சூழ்நிலை இங்கு உருவாகுமா என்று என்னை போல் பலருக்கு சந்தேகம் இருக்கிறது. ஆனால் தனித்துவமான எண்ணங்களும் கட்டமைப்பும் இங்கு தான் இருக்கிறது என்பது தனித்துவமான அடையாளம். சுயமாக படைப்பாளிகள் செயற்படும் சுதந்திரம் எமது தளத்தில் தான் இருக்கிறது. நல்ல கவிதைகள் வறண்ட நிலம் போல ஆகக் கூடாது அவைகள் அருவிகள் போல் என்றும் பலரின் உள்ளங்களில் நீந்திக்கொண்ட இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். சுயநலம் என்று பலரும் நினைக்கலாம் ஆனால் என்னை புரிந்த ஒரு சிலர் நிச்சயம் அதனை வெறுப்பார்கள் என்பதே என் நம்பிக்கை. 21-Sep-2017 10:30 am
மன்சூர் - ஜெர்ரி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Aug-2017 1:30 pm

கொள்ளி வைக்க விரும்பி
மகனைப் பெற்றாள் – அவனோ
தள்ளி நின்று வசதியாய் வாழ
வெளிநாடு சென்றான்...!

அன்னையின் இறப்பிற்கு
மகனின் வேதனை வெளிப்பட்டது...

ஏ.டி.எம் கார்டில் வந்து சேர்ந்த
அந்த பணத்தில்...!!

-ஜெர்ரி

மேலும்

நிகழ்கால கரைகடந்த பறவைகளின் கண்ணீராய் உணர்வுகள் அழுகிறது.. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Aug-2017 12:50 am
மன்சூர் - மன்சூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Aug-2017 8:37 pm

ஒரு ஊர்ல நல்ல திடகாத்திரமான ஒரு ஆள் இருந்தான். அவனுக்கு கல்யாணமாகி இருபத்தி ஏழு வருடமாகுது. கல்யாணம் ஆனதிலேந்து அவனுக்கு வருசா வருஷம் கொழந்த பிறக்கும். இப்பவரைக்கும் அவனுக்கு இருபத்தி ஏழு குழந்தைகள். ஊர்காரங்களாம் அவனப்பத்தி அப்டி இப்டி பேசினாலும் அவன் முன்னாடி எவனும் ஏதும் பேசமாட்டான். அவனுக்கும் தன் ஆண்மையை பத்தி மத்தவங்க பேசுறது அவனுக்கு பெருமையை இருக்கும்.
அந்த ஊர் கிராம ஆஸ்பித்திரியில் அவன் ரொம்ப பேமஸ். அவன் பிரசவத்துக்கு பொண்டாட்டிய கூப்டு வந்தாலே அங்க வேலை செய்ற நர்ஸ் டொக்டர்ஸ்க்கு லாம் கடுப்பா இருக்கும், எவ்ளோ சொல்லியும் குடும்ப கட்டுப்பாடு பண்ண விட மாற்றான் அவன் பொண்டாட்டிய.

இப்போ

மேலும்

மன்சூர் - மன்சூர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2017 9:32 am

அழகான பெண்ணவள்,
அவள் தானே என்னவள்.
என் அருகே இருப்பவள்,
என் உயிரோடு கலந்தவள்..

அவள் சிரிப்பிலே நான் மயங்கினேன்,
விட்டு விலகவே நான் தயங்கினேன்.
அவள் சிரிப்பிலே நான் மயங்கினேன்,
விட்டு விலகவே நான் தயங்கினேன்.

தினமும் என்னை என்றும் நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள்.
தனக்கென பிறந்த பிள்ளையாய் என்னை எண்ணிக் கொண்டாள்.
இவள் போல் ஒருவளை நானெங்கு தேடுவேன்?

அழகான பெண்ணவள்,
அவள் தானே என்னவள்.
என் அருகே இருப்பவள்,
என் உயிரோடு கலந்தவள்.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சுரேஷ் சிதம்பரம்

சுரேஷ் சிதம்பரம்

பென்னகோணம், பெரம்பலூர் மா

இவர் பின்தொடர்பவர்கள் (13)

இவரை பின்தொடர்பவர்கள் (15)

இப்னு மீரான்

இப்னு மீரான்

திருநெல்வேலி - சென்னை
பிரகாஷ் வ

பிரகாஷ் வ

நாமக்கல்
user photo

சாஜிதா

புதுக்கோட்டை
மேலே