இனியாவது ஒரு விதி செய்வோம்

கவிகளாயிரம் தொடுப்போம் - உந்தன் பாத தரிசனத்திற்கு பிறகே அதையும் படைப்போம்...

உரிமைக்குரல் கொடுப்போம்- குரல் வளையை நெரிக்கின்ற நியாயமற்ற கோட்பாடுகளை உடைப்போம்...

வேர்வைதுளிகளை விதைப்போம்- துரோகத்தால் விழுகின்ற போதெல்லாம் எழுகிற திடம் கேட்போம்...

சாதிப்பேய்களை ஒழிப்போம்- இங்கு சாகா வரம் பெற்றவன் யாருமில்லையென்று உரைப்போம்...

பேனாநுனியில் வசிப்போம்- சீர்கெட்ட வாதிகளின் முகத்திரையை மறக்காமல் கிழிப்போம்...

பெண்ணியத்தை மதிப்போம்- கற்பு ஆணுக்குமுண்டென்று முட்டாள் அறிவிலும் புதைப்போம்...

பொய்மையை துறப்போம்- உரிமையே தமிழனின் வீரமென அந்நியர்களுக்கு பறையடிப்போம்...

ராமன்களை மட்டுமே வரவேற்போம்- சேலைபிடித்து இழுக்கும் துரியோதன்களை அவதாரம் எடுத்தாவது அழிப்போம்...

விவசாயத்தை மீட்போம்- நாலுமொழகயிற்றில் விரையமாகும் உன்னத உயிர்களை காப்போம்...

அந்தியமொழியிலிருந்து விழிப்போம்- அன்னை தமிழை நிதந்தோரும் உயிரில் கரைப்போம்...

மனிதநேயத்தை வாசிப்போம்- அடுத்தவனுக்கு கேடு நினையாத மனித தன்மையை யாசிப்போம்...

மேற்கூறியவற்றை உயர் பெற
பாரதியின் துணையோடு
"இனியாவது ஒரு விதி செய்வோம்"

எழுத்தில் வெடியட்டும் புரட்சி
அதற்கு அந்த பாரதியே சாட்சி
@ஸ்ரீதேவி

எழுதியவர் : ஸ்ரீதேவி (11-Sep-17, 4:39 pm)
பார்வை : 341

மேலே