ஸ்ரீ தேவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஸ்ரீ தேவி
இடம்:  சென்னை. Tamilnadu
பிறந்த தேதி :  07-Jul-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-May-2014
பார்த்தவர்கள்:  616
புள்ளி:  182

என்னைப் பற்றி...

என் கவிதையில் காதல் மொழி இணைத்திருக்கும் ஆனால் நான் காதலில் இணைந்ததுஇல்லை......கனவுகளுக்கு பின்னால் ஓடுகிறேன்...இலக்கை எட்டிவிடுவேன் என்ற நம்பிக்கையில் ☺😊

என் படைப்புகள்
ஸ்ரீ தேவி செய்திகள்
ஸ்ரீ தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2019 9:45 pm

#மறந்து போ

இதயத்தின் மையத்தில்
விழுந்த – அவள்
விழிதுளியை மறந்துபோ...

மார்கழி குளிரில்
உறைந்த பனிதுளியாய்
வார்த்தைகளுக்குள் தேங்கிய – அவளது
மௌனத்தை மறந்துபோ...

செவிகளுக்கு பழக்கப்பட்ட – அவளது
கொலுசின் முணங்களை
மறந்துபோ...

படித்த புத்தகத்தில்
கோடிட்டு பதுங்கிய
பிடித்த வரியாய் – அவளது
பிடிவாதத்தை மறந்துபோ...

கொட்டிய மழையில்
குடையாகிபோன – அவளது
புடவ முந்தானையை மறந்துபோ...

விழியில்
ஒரு வானவில்லாய் அப்பப்போ
விழித்துக்கொள்ளும் – அவளது
நாணத்தை மறந்துபோ...

விளக்கம் கேட்காமல்
விசாரணை நடத்தும் – அவளது
முன்கோபத்தை மறந்துபோ...

இருளுக்கும், இடிக்கும்
என் இம்

மேலும்

ஸ்ரீ தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2019 8:55 pm

இரவை ஒதுக்கிய விடியல் நீ...
இருளை தழுவிய இரவும் நீ…

அர்த்தமற்ற அகராதி நீ…
அர்த்தம் பெற்ற கவிதையும் நீ…

நிலம் ஏந்தும் நிழல் நீ…
நிழலாகிபோன நிஜமும் நீ…

முரண்பாடாண முகவரி நீ…
முரண்டுபிடிக்கும் முற்றுப்புள்ளியும் நீ…

அறியாமையின் மிச்சம் நீ…
அறிய துடிக்கும் உச்சமும் நீ…

குடைக்குள் விழும் அடைமழை நீ…
குளிர்பார்வை தேடும் கதகதப்பும் நீ…

நினைவின் நீடிப்பு நீ…
நினையாத வேளையில் முளைப்பதும் நீ…

மறைக்க கூடிய இரகசியம் நீ…
மறைவில் உறங்காத வெளிச்சமும் நீ…

நிரப்பப்படாத காகிதம் நீ…
நிரம்பி வழிக்கின்ற கனவிலும் நீ…

கரையாத காத்திருப்பு நீ…
கரைசேர துடிக்கும் காதல் நீ…
கணக்கெடுக்காத என் அத்தனையிலும் நீ...

மேலும்

ஸ்ரீ தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2019 11:37 am

சில சமயங்களில்
தாயாகி போனவளுக்கும் தளர்வுண்டு
சகோதரியாய் பிறந்தவளுக்கும் சங்கடமுண்டு
தோழியாய் சிரிப்பவளுக்கும் தோல்வியுண்டு
காதலியாய் இருப்பவளுக்கும் காயமுண்டு
தாரமாய் வந்தவளுக்கும் தயக்கமுண்டு
மகளாய் வளர்பவளுக்கும் மறதியுண்டு

பிழைகள் இருந்தாலும்
பிடித்தமான கவிதையாய்
வாசிக்கும் போது
இனிப்பது பெண்ணிணமே...

உருவங்கள் வேறானாலும்
பிரதிபலிப்பு ஒன்றை...

பெண்களின்
எண்ணங்களையும் உணர்களையும்
மதிக்க வேண்டும் என்ற
கட்டாயமல்ல,
இவைகள் இருப்பதை
மறந்திடாத சமூகம் மட்டுமே
அவளது தேடலில்!!!

@ஸ்ரீதேவி

மேலும்

ஸ்ரீ தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2019 3:40 pm

ஆண்: வானெல்லாம் முகிலாக,
முகிலெல்லாம் நீயாக,
விழுந்தாயே மழையாக,
விதையாகி நான் போனால் என்ன?
பெண்: உறங்காத கனவாகிட,
உனைசேரும் நாள் பார்த்திட,
ஊதகாத்திலும் உயிர் வேர்த்திட,
உறையாமல் நீ பார்த்தால் என்ன?
ஆ: இணையாக நீ நின்றால்
பெ: இடைவெளி இனி எங்கே?
ஆ: நிழலாக நான் வீழ்ந்தால்
பெ: நிலமாக மாறேனா?

பெ: கண்ணாடி முன்னாடி
நான் நின்றால் நீதானே தெரிகின்றாய்...
ஆ: கண்ணாலே எனையள்ளி
மையாக்கி விழியோரம் சேர்கின்றாய்...
பெ: காற்றாக நீ மாறி
காதோரம் கதைநூறு சொல்வாயா?
ஆ: ஊற்றாக உருமாறி
உடலோடு உயிராகி போவாயா?
பெ: இனி காலங்கள் தோறும் உன்னோடு...
ஆ: அந்த காதலும் தொடரும் பின

மேலும்

ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2018 4:29 pm

கவிப்பாடும் மன்னனுக்கு,
கவிச்சொல்லும் காதல் சொல்லவா?
நிழலான உந்தன் கவியை,
நிஜமாக நானும் தீட்டவா?
அலையாக நானும் கரையேற வேண்டும்...
அலையாக நீயும், நானும் கரையேற வேண்டும்....

பனிப்பொழிவு வருகிறபோது
நெருப்புக்கும் குளிருமா?
தோட்டத்து பூக்கள்கூட
அனலில்தான் மலருமா?
கண்ணா நான் இளங்கன்னி,
தேய்கிறேனே உன்னை எண்ணி,
எனை பார்த்து ஒரு வார்த்தை சொல்லிவிடு.
எனக்கே எனக்கென்று உனை அள்ளிக் கொடு.

கண்ணா உன் துறுதுறுக் கண்கள் என்னைதான் ரசிக்கிறதா?
நான் பார்க்கும் போது மட்டும் பொய்யாக நடிக்கிறதா?
உயிரே நீ மறைத்தாலும் ,
உணர்வாலே நான் அறிவேன்...
அன்பே நான் உன்னாலே வாழ்ந்திருப்பேன் மண்மேலே...

மேலும்

அருமை... வாழ்த்துக்கள் 14-Jun-2018 6:00 pm
'பனிப்பொழிய நெருப்பும் குளிருமா' என்றிருந்தால் எப்படி ? யோசிக்க மற்றபடி நன்று... 08-Jun-2018 11:58 am
நன்றி!!! 07-Jun-2018 6:16 pm
அழகு 07-Jun-2018 6:11 pm
ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Apr-2018 3:05 pm

நீ இமைக்கின்ற போதெல்லாம்
இமையாகி போவேனா?

நீ அணைக்கின்ற போதெல்லாம்
தடுமாறி வீழ்வேனா?

என் தனிமைக்கு துணைப்புரிய
உன் நினைவுகளை
மறவாமல் அழைப்பேனா?

உன் இதயத்தில்
என் காதலை தேக்கி
எந்நேரமும் உனக்காகவே துடிப்பேனா?

உனது என்று
நீ பதுக்கும் ஆசையில்
முளைக்காமல் நான் போவேனா?

ஊடல் என்று
நீ விலகும் வேளையில்
நிழலாய் தொடர மறப்பேனா?

நான்
முகவரியில்லா கடிதமானாலும் - நீ
படித்திட மட்டுமே பிறந்தேனா?

உன் விழிப்போடும் கவிதையானாலும் - அதன்
விளக்கம் கேளாமலே படிப்பேனா?

உன்னுயிருக்கும்
என்னுயிருக்கும்
பாலம் அமைத்து
வழி செய்திடுவேனா?

உன் மூச்சிக்காற்றிலே
என் அல்ப பேராசை

மேலும்

இரண்டாவதுக்கு 19-Apr-2018 6:46 pm
இது காதல் தோன்றியதும் எழும் கேள்விகளா?காதலுக்கு செய்யும் வேள்விகளா? 19-Apr-2018 2:47 pm
அனுபவம் அல்ல என் கவிதை வெறும் கற்பனையே என்பதற்காக 18-Apr-2018 10:59 pm
நன்றி!!! 18-Apr-2018 10:58 pm
ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2018 7:43 pm

யார் நீ?
நேற்றுவரை முகம் தெரியாத முகவரியா...
இன்றுமுதல் என் அத்தனை கவிதைக்கும் நீயே முதல் வரியா...
உன்னை சேராதவரை
உடலைவிட்டு உயிரும் இனி தனியா...

யார் நீ?

தேய்பிறையில் முழுநிலவா நீ - நான்
தேடாதவாரு ஒளிந்துகிடப்பவளா நீ?
தேன்மழையின் திகட்டலா நீ - அழகு
தேவதையின் பிம்பமானவளா நீ?...

வேதங்களின் மொழிபெயர்பா நீ - என்
வேண்டுதல்களில் நிறைந்திருப்பவளா நீ?
வேற்றுமையின் ஒற்றுமையா நீ - இரு
வேல்விழிகளாலே வதைப்பவளா நீ?...

வைரமுத்துவின் கவிதையா நீ - என்
வைரநெஞ்சத்தில் ஒளிவீசுபவளா நீ?
வைகறையின் துயலா நீ - காதல்
வைத்தியத்தில் கைதேர்ந்தவளா நீ?...

முந்தானைமுகிலின் முதல்மழையா நீ - என்

மேலும்

நன்றி!!! 03-Mar-2018 8:06 pm
அருமை! 03-Mar-2018 6:40 pm
ஆம்! 02-Mar-2018 9:33 pm
விடை தெரிய வாழ்க்கை அவள் தேடலில் கிடைக்கும் புதையல்.... 02-Mar-2018 8:45 pm
ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Jan-2018 10:47 pm

ஆண்:
கனவிலும், நனவிலும்
உந்தன் நினைவின் தாகம்
பெண்:
எதிரிலும், எதிலிலும்
உந்தன் விழியின் மோகம்
ஆ:
இதழ்கள் பூட்டும் மௌனத்திலே,
கோடி ஆசைகள் புரியலையா?
பெ:
புரிந்து கொள்ளும் சமயத்திலே,
விடுப்பு எடுக்க வழியில்லையா?
ஆ:
உயிரின் தேடல்
உன்னிடம் முடியும்,
முடியும் பொழுது -பல
இரவுகளும் விடியும்...

ஆ:
கண் விழித்திடும் நேரம்,
என் கனவுகளும் நீளும்,
தள்ளி நீயும் போகின்ற தூரம்,
தாங்காதே என் நெஞ்சின் ஓரம்...
பெ:
நான் நீயென்ற போதும்,
வான் நிலமாய் மாறும்,
உதடுகள் நெருங்காத என் காதும்,
ரகசியத்தை வேண்டியே உனைதேடும்
ஆ:
தேடல்கள் முடியுமா?
மனம் தேடியே தொலையட்டுமே

மேலும்

இது காதல் நதியில் மூழ்கி முத்தெடுக்கும் இரு கவிப் பறவைகளின் உலாக்கோலம் .... மிக அருமை, வாழ்த்துக்கள் 03-Feb-2018 3:56 pm
நன்றி!!! 30-Jan-2018 3:34 pm
காதல் கீதம்..!! 29-Jan-2018 8:23 pm
நன்றி!!! உங்கள் பொன்னான நேரத்தை வாசிப்பில் கரைத்ததிற்காக 29-Jan-2018 7:43 pm
ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2017 7:42 pm

சூரியனும்
உறங்கி கிடக்கையிலே,
உதிக்கும் என் நினைவுகளில் எல்லாம் நீயே!!!

நிலவும்
காலையில் வருகையிலே,
விழித்திருந்த கண்களின் இடையில்
புதைந்துகிடப்பதும் நீயே!!!

கடலே
மௌனவிரதம் புரிகையிலே,
அலைஅலையாய் வந்து என் உணர்ச்சி கரையை தொடுவதும் நீயே!!!

மழையும்
குடைப்பிடிக்கையிலே,
என் மேனி ஈரங்களில் நனையாமல் இருப்பதும் நீயே!!!

உடைந்துபோன
வாழ்வினிலே,
சிதறிய சில்லில் எல்லாம்
சிரிப்பதும் நீயே!!!

வெட்கமெல்லாம்
விடுமுறை கேட்கையிலே,
என் முந்தானையின் முணங்கல் சத்தத்திலும் நீயே!!!

புயலும்
தளர்ந்துபோகையிலே,
உள்ளிழுக்கும் என் மூச்சிக்காற்றில் நிறைந்திருப்பதும் நீயே!!!

கண்ணீரும்

மேலும்

ஒருவரின் நிலை பெருத்து அவருக்காய் வாழ்நாள் முழுவதும் விட்டுக் கொடுப்பதே காதல் 25-Jun-2017 5:29 pm
நன்றி!!! @sajitha94 22-Jun-2017 7:38 am
அருமையான வரிகள் ... இடைவேளையோடு துடிக்கும் இதயத்திலே, இடைப்பட்ட நேரத்திலும் இம்சையோடு இசைப்பதும் நீயே! 21-Jun-2017 11:42 pm
ஸ்ரீ தேவி - ஸ்ரீ தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Feb-2016 8:14 pm

மௌனங்கள் தூது பேசும் அவனது ''மொழியில்''
விடியாத பல பகல்கள் உண்டு அவனது ''விழியில்''
அடிக்கடி விழுந்தாலும் வலிப்பதில்லை அவனது ''கண்ணகுழியில்''
கள்வனாய் என்னை கொள்ளையடித்தான் அவனது ''சதிவழியில்''
ஈரெழு ஜென்மமும் தண்டனை பெற வேண்டும் அவன் ''மனைவி'' என்னும் ''பழியில்''

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
அனுசுயா

அனுசுயா

தூத்துக்குடி
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே